ஆப்நகரம்

கால்பந்து பிரபலப்படுத்துறது எல்லாம் சரி... ரசிகர்களுக்கு டாய்லெட் தண்ணீரா கொடுப்பது?

கிரிக்கெட் போட்டியைப் போல, கால்பந்து போட்டியையும் இந்தியாவில் பிரபலமடைய செய்யும் பொருட்டு பிபா 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டி டெல்லியில் நடைப்பெற்று வருகின்றது.

TNN 8 Oct 2017, 9:04 am
கிரிக்கெட் போட்டியைப் போல, கால்பந்து போட்டியையும் இந்தியாவில் பிரபலமடைய செய்யும் பொருட்டு பிபா 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டி டெல்லியில் நடைப்பெற்று வருகின்றது.
Samayam Tamil why fifau 17 world cup ties at delhis nehru stadium were a nightmare
கால்பந்து பிரபலப்படுத்துறது எல்லாம் சரி... ரசிகர்களுக்கு டாய்லெட் தண்ணீரா கொடுப்பது?


இதன் துவக்க போட்டியில் இந்தியா - அமெரிக்கா அணிகள் மோதின. போட்டியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.இந்த போட்டியை காண சுமார் 27 மாணவர்களுக்கு இலவச நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டிருந்தது. அதனால் மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்தது.

இப்படி டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கிய போட்டி நிர்வாகம், சிறுவர்கள் தண்ணீர் பாட்டிலை மைதானத்தில் எடுத்து வரக்கூடாது என தடுத்து விட்டது.

இதனால் சிறுவர்கள் தாகத்தில் தத்தளித்தனர். அவர்கள் அங்கு தூக்கு வீசப்பட்டிருந்த சிறிய தண்ணீர் பாட்டில்கள், 20 லிட்டர் பாட்டில்கள் என அதில் மிச்சம் எஞ்சியிருந்த தண்ணீரை குடிக்க சண்டையிட்டுக்கொண்டனர்.

மாணவர்கள் அணிந்து வர டி-சர்ட்டுகள், தொப்பிகள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல அனுமதிக்காததால், மாணவர்கள் அங்கிருந்த கழிப்பறையில் இருந்த பைப்பில் வரும் தண்ணீரை பாட்டிலில் பிடித்து குடித்ததாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.



போட்டியை பிரபலப்படுத்துதலும், இந்திய விளையாட்டுத்துறையை முன்னேற்றுவது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மனிதனுக்கு தேவையான அடிப்படையை நிறைவேற்றாமல் எதுவும் சாதிக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும். பாதுகாப்புக்காக இப்படி செய்ததாக கூறியது தவறில்லை, ஆனால் முறையான குடிநீர் வசதி செய்து கொடுத்திருந்தால் மாணவர்கள் அவதிப்பட்டிருக்க மாட்டார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்