ஆப்நகரம்

போல்ட் போனா போகட்டும், அடுத்த சூப்பர் ஸ்டார் வருவார்: கால்டின்!

ஜமைக்காவின் உசைன் போல்ட் தனது ஓய்வு முடிவில் இருந்து கண்டிப்பாக மீண்டு வருவார் என அவரது போட்டியாளாரான அமெரிக்காவின் கால்டின் கணித்துள்ளார்.

TOI Sports 29 Jul 2017, 4:04 pm
ஜமைக்காவின் உசைன் போல்ட் தனது ஓய்வு முடிவில் இருந்து கண்டிப்பாக மீண்டு வருவார் என அவரது போட்டியாளாரான அமெரிக்காவின் கால்டின் கணித்துள்ளார்.
Samayam Tamil why usainbolt can reverse retirement decision justin gatlin explains
போல்ட் போனா போகட்டும், அடுத்த சூப்பர் ஸ்டார் வருவார்: கால்டின்!


உலகின் மின்னல் மனிதன் ஜமைக்காவின் உசைன் போல்ட். இவர் பீஜிங் (2008), லண்டன் (2012), ரியோ (2016) என ஒலிம்பிக் அரங்கில் 100 மீ., ஓட்டத்தில் ஹாட்ரிக் தங்கம் வென்று அசத்தியவர். தவிர, இதே ஒலிம்பிக்கில் 200 மீ, 4*100 மீ., ஓட்டத்திலும் மூன்று முறையும் தங்கம் வென்றிருந்தார். ஆனால் இவரது அணி வீரர் செய்த தவறால், இவரது ஒரு 4*100 மீ ஒலிம்பிக் தங்கம் பறிபோனது.

தடகளத்தில் வீழ்த்த முடியாத நாயகனாக ஜொலித்த போல்ட், 100., மீ., ஓட்டத்தில் உலகசாதனை, ஒலிம்பிக் சாதனை உட்பட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இந்நிலையில் இவரது போட்டியாளாராக கருதப்படும், அமெரிக்க தடகள வீரர் ஜஸ்டின் கால்டின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கால்டின் கூறுகையில்,’தற்போது ஆர்வக்கோளாறு காரணமாக போல்ட் ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார். தற்போது 30 வயதாகும் அவர் ஆர்வத்தில் உலகையே ஜாலியாக வலம் வருவார். ஆனால் அது கொஞ்சநாளில் போரடித்துவிடும். பின் மனம் மீண்டும் டிராக்கை தேடும். மக்கள் அவரது ஓய்வுக்கு பின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என தேடுவார்கள். அதனால் அதை யாராவது பூர்த்தி செய்தேயாக வேண்டும். தற்போது எனக்கு முன்நின்று செயல்பட வேண்டிய கடமை உள்ளது. ‘ என்றார்.

BIRMINGHAM: Usain Bolt could be tempted to reverse his decision to retire from athletics after next month's world championships, his American sprint rival Justin Gatlin said on Friday.

அடுத்த செய்தி

டிரெண்டிங்