ஆப்நகரம்

கொடிய புற்றுநோயுடன் போராடும் பிரபல மல்யுத்த வீரர் ரோமன்- ரசிகர்கள் அதிர்ச்சி!!

WWE இல், முன்னணி மல்யுத்த வீரராக இருக்கும் ரோமன் ரெயின்ஸ், லுகேமியா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Oct 2018, 7:09 pm
பிரபல மல்யுத்த நிகழ்ச்சியான WWE இல், முன்னணி மல்யுத்த வீரராக இருக்கும் ரோமன் ரெயின்ஸ், லுகேமியா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil DqMhxzQWkAEdmPy


WWE என்பது, பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் மல்யுத்த நிகழ்ச்சியாகும். அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் இந்த நிகழ்ச்சிக்கு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.



பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு சூப்பர் ஸ்டார்கள் இதன் மூலம்பிரபலமடைந்துள்ளனர். ஹல்க் ஹோகன், ஆஸ்டின், ஹாலிவுட் நடிகர் ராக், ஜான் சீனா, பிராக் லெஸ்னர் உள்ளிட்டோர் அவர்களில் குறிப்பிடத்தக்க சிலராவர். தற்போது, அந்த வரிசையில் அடுத்ததாக இருப்பவர் ரோமன் ரெயின்ஸ், நடப்பு யுனிவர்சல் சாம்பியனான இவருக்கும், உலகம் முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், அவர் தனக்கு லுகேமியா என்ற புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததாகவும், தற்போது மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், புற்றுநோய் பாதிப்பால் தனது சாம்பியன் பட்டத்தையும் கைவிட்டுள்ளார். அவரின் இந்த திடீர் அறிவிப்பு உலகம் முழுவதும் உள்ள மல்யுத்த ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்