ஆப்நகரம்

சர்வதேச சிலம்ப போட்டியில் வென்ற மதுரை சிறுவனுக்கு ஸ்போர்ட்ஸ் ஸ்டார் விருது!!

இந்த ஆண்டுக்கான National Sports & Physical Fitness Board -இன் "International Sports Star Award" விருதை, மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த ஜெ.அதீஸ்ராம் (10) வென்றுள்ளார்.

Samayam Tamil 13 Aug 2020, 12:17 am
ஹரியானாவை தலைமையிடமாகக் கொண்ட National Sports and Physical Fitness Board அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச, தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது.
Samayam Tamil award


பல பிரிவுகளை உள்ளடக்கிய விருது பிரிவு பட்டியலில் சர்வதேச விருதுக்கான பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இவர் ஒருவர் மட்டுமே தேர்வாகியுள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் போட்டியில் முதல் பரிசான தங்கம் வென்றதற்காக இந்த சர்வதேச விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியாக இவ்விருது தபால் மூலம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சாலையில் பயிற்சி செய்யும் வீரர்கள்: பாகுபாடு காட்டுகிறதா தமிழக அரசு?

கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுரை விராட்டிபத்து ஸ்ரீ மாருதி சிலம்பம் பள்ளியில் சிலம்பம் கற்றுவரும் அதீஸ்ராம், செக்கானூரணி கேரன் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில், மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் இரட்டைக் கம்பு பிரிவில் முதலிடம் பெற்றார். இவர் பல்வேறு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த தேசிய போட்டியிலும் சிலம்பத்தில் முதல் பரிசை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கால் பந்து சீரிஸ் ஏ: ‘ஹாட்ரிக்கில் ஒரு ஹாட்ரிக்’ ஜூவென்டஸ் அணி சாதனை!

ஸ்கேட்டிங் செய்து கொண்டே வேகமாக சிலம்பம் சுற்றுவது அதீஸ்ராமின் தனிச் சிறப்பு. அத்துடன் களரி, கட்டைக்கால், வில்வித்தை சிறப்பு பயிற்சியில் நிறைவு பகுதியை எட்டியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மாவட்ட, மாநில அளவில் அறுபதுக்கும் மேற்பட்ட சிலம்பம் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளதுடன் அனைத்திலும் இவர் வெற்றி பெற்றுள்ளார் என்பது இவரது சிறப்பம்சமாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்