ஆப்நகரம்

ஆசிரியர்களுக்கு புதிய நலத்திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

ஆசிரியர்கள் நலனுக்கான புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 1 Mar 2023, 11:19 am
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் ஆசிரியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார்.
Samayam Tamil mk stalin


ஆசிரியர்களின் நலனைக் காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் அதற்காக 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள்

  • அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக் கணினி (டேப் லெட்) வழங்கப்படும்.

  • அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.
தமிழ்நாட்டில் மீண்டும் இடைத்தேர்தல் : ஓபிஎஸ்ஸுக்கு காத்திருக்கும் பேராபத்து -அடித்து ஆடும் எடப்பாடி!

  • அரசின் திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள் வெளிநாடு கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

  • உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக வழங்கப்படும் கல்விச் செலவு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
எடப்பாடி மீது சொத்து குவிப்பு வழக்கு? மேலிடம் போட்ட பக்கா ஸ்கெட்ச்: இந்த தடவை மிஸ் ஆகாதாம்!

மொத்தம் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி