ஆப்நகரம்

திரைத்துறையில் பத்து ஆண்டுகள் நிறைவு: நாயகியில் இருந்து தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் டாப்சி!

நடிகை டாப்சி புதிதாக 'அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 16 Jul 2021, 10:01 am
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆடுகளம் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை டாப்சி. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் திரைத்துறையில் நுழைந்து பத்து ஆண்டுகள் கடந்ததையொட்டி, புதிய தளத்தில் பயணிக்க போவதாக அறிவித்துள்ளார் டாப்சி.
Samayam Tamil Taapsee_Pannu
Taapsee_Pannu


அண்மையில் டாப்சி நடிப்பில் இந்தியில் ஹசீன் தில்ருபா படம் நெட்பிளிக்சில் வெளியானது. விக்ராந்த் மாசேவுடன் இவர் நடித்திருந்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. அடுத்ததாக தமிழில் விஜய் சேதுபதியுடன் அனபெல் சுப்ரமணியம் என்ற படத்தில் நடித்து வருகிறார். தீபக் சுந்தர்ராஜன் எழுத்து மற்றும் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது புதிதாகப் படத் தயாரிப்பில் ஈடுபட போகிறார் டாப்ஸி. 'அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள தனது தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திரில்லர் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார் டாப்சி. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்..,

ஆகஸ்டில் வெளியாகும் விஷ்ணு வர்தனின் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
"கடந்த ஆண்டோடு இந்தியத் திரைத்துறையில் நான் குதித்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நிறைவடைந்தபோது, இதில் நான் மிதப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இதில் நீந்தவும் கற்றுக் கொள்வேன் என்று எனக்குத் தெரியாது. ஒரு பிரபலமான நபராக வேண்டும் என்ற கனவு இல்லாமல் இருந்த என்னைப் போன்ற ஒருவர் மீது அதீத அன்பையும் நம்பிக்கையையும் வைத்த அனைவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.


இது அவர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம். அதனால் தற்போது அவுட்சைடர் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கியுள்ளேன். அதை வெற்றிகரமாக நடத்த அனைவரது வாழ்த்துக்களும் தேவை. என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன், ‘அவுட்சைடர் பிலிம்ஸ்’ மூலம் ஒரு தயாரிப்பாளராக" என குறிப்பிட்டுள்ளார் டாப்சி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்