ஆப்நகரம்

இப்படி நடக்கும்னு தெரியாமல் கடைசி வரை பயத்திலேயே இருந்த ஸ்ரீதேவி

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தனது அண்ணன் அர்ஜுன் கபூருடன் சேர்ந்து ஃபேஷன் ஷோ ஒன்றில் ராம்ப் வாக் செய்துள்ளார்.

Samayam Tamil 28 Jan 2020, 1:59 pm
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தனது அண்ணன் அர்ஜுன் கபூருடன் சேர்ந்து ஃபேஷன் ஷோ ஒன்றில் ராம்ப் வாக் செய்துள்ளார்.
Samayam Tamil arjun kapoor janhvi walk the ramp together
இப்படி நடக்கும்னு தெரியாமல் கடைசி வரை பயத்திலேயே இருந்த ஸ்ரீதேவி


ராம்ப் வாக்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டார். அவர் தனது அண்ணனும், பாலிவுட் நடிகருமான அர்ஜுன் கபூருடன் சேர்ந்து ராம்ப் வாக் செய்தார். அண்ணனும், தங்கையும் சேர்ந்து ஒய்யாரமாக நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஜான்வியும் அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.

ஸ்ரீதேவி

ஜான்வியும், அர்ஜுனும் ராம்ப் வாக் செய்ததை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் இந்த காட்சியை பார்க்க ஸ்ரீதேவி உயிருடன் இல்லையே என்று வருத்தப்பட்டுள்ளனர். பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவியின் மகன் தான் அர்ஜுன். ஸ்ரீதேவி உயிருடன் இருந்தவரை அர்ஜுனின் வெறுப்பை நினைத்து தான் பயந்து கொண்டே இருந்தார் ஸ்ரீதேவி. அர்ஜுனும் ஸ்ரீதேவி என் தந்தையின் மனைவி, அவ்வளவு தான் என்று கூறி வந்தார்.

ஜான்வி கபூர்

அர்ஜுன் கபூர் தன் மீது வைத்துள்ள வெறுப்பை நினைத்து கவலையிலே இருந்தார் ஸ்ரீதேவி. ஆனால் அவர் இறந்த பிறகு ஜான்வி மற்றும் அவரின் தங்கை குஷி கபூர் ஆகியோரை தன் சொந்த தங்கைகளை போன்று பார்த்துக் கொள்கிறார் அர்ஜுன். ஸ்ரீதேவி இருந்தவரை அர்ஜுன் ஜான்வி, குஷியை கண்டுகொள்ளவில்லை. ஆனால் தற்போது அவர் அப்படி இல்லை.

அர்ஜுன் கபூர்

தாயில்லாமல் கஷ்டப்படுவது எவ்வளவு கொடுமை என்பது எனக்கும் தெரியும். ஜான்வி, குஷியை தனியாக தவிக்க விட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார் அர்ஜுன். ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அர்ஜுன் இந்த அளவுக்கு மாறுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. தற்போது அர்ஜுன் மற்றும் ஜான்வி ஆகியோர் அவரவர் படங்களில் பிசியாக உள்ளனர். குஷி விரைவில் அம்மா, அக்கா வழியில் நடிகையாகப் போகிறார்.

எதுக்கு டிரெஸ் போடுறோம்னே மறந்துட்டீங்களே: நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்

அடுத்த செய்தி

டிரெண்டிங்