ஆப்நகரம்

என் அம்மா சன்னி லியோன், அப்பா முத்த ஹீரோ: பீகார் மாணவரால் பரபரப்பு

கல்லூரி மாணவர் ஒருவர் தேர்வுக்கான அட்மிட் கார்டில் தன் பெற்றோர் சன்னி லியோன் மற்றும் இம்ரான் ஹஷ்மி என்று குறிப்பிட்டுள்ளார்.

Samayam Tamil 15 Dec 2020, 10:25 am
பீகார் மாநிலத்தில் இருக்கும் தன்ராஜ் மகதோ டிகிரி கல்லூரியில் பி.ஏ. படித்து வருபவர் குந்தன் குமார். 20 வயதாகும் அவர் தேர்வுக்கான அட்மிட் கார்டில் தன் பெற்றோர் சன்னி லியோன் மற்றும் இம்ரான் ஹஷ்மி என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அட்மிட் கார்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
Samayam Tamil sunny leone


இப்படி ஒரு மகன் இருப்பது நடிகை சன்னி லியோனுக்கும், பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மிக்கும் தெரியுமா என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். இதற்கிடையே குந்தன் குமார் செய்த காரியம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்களாம்.

குந்தன் குமார் செய்த காரியம் வைரலாக அது குறித்து அறிந்த சன்னி லியோன் மற்றும் இம்ரான் ஹஷ்மி ட்வீட் செய்துள்ளனர்.
குந்தன் குமாரின் வைரல் ட்வீட்டை பார்த்த சன்னி லியோன் அவரின் கற்பனையை பாராட்டி சிரித்துள்ளார்.

இம்ரான் ஹஷ்மியோ குந்தன் குமார் தன் மகன் இல்லை என்று ட்வீட் செய்துள்ளார். இம்ரான் ஹஷ்மியும், சன்னி லியோனும் சேர்ந்து இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இம்ரான் ஹஷ்மியின் பாத்ஷாஹோ படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார் சன்னி லியோன்.

சன்னி லியோன் தமிழில் வீரமாதேவி படத்தில் நடிக்கிறார். மேலும் சந்தோஷ் நாயரின் ரங்கீலா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இது தவிர ஹெலன் உள்ளிட்ட பல படங்கள் அவரிடம் உள்ளது. இம்ரான் ஹஷ்மி அபிதாப் பச்சனுடன் சேர்ந்து செஹரே படத்தில் நடிக்கவிருக்கிறார்.

கொரோனா வார்டில் நர்ஸாக இருந்த இளம் நடிகைக்கு பக்கவாதம்

அடுத்த செய்தி

டிரெண்டிங்