ஆப்நகரம்

என் பிறந்தநாள் அன்று 9 வயது மகன் இறந்துவிட்டான்: நகைச்சுவை நடிகர்

பிரபல நகைச்சுவை நடிகர் ராஜீவ் நிகமின் 9 வயது மகன் தேவ்ராஜ் அவரின் பிறந்தநாள் அன்று இறந்துவிட்டார்.

Samayam Tamil 10 Nov 2020, 8:26 am
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜீவ் நிகமின் மகன் தேவ்ராஜ். அவர் கடந்த 8ம் தேதி ராஜீவ் நிகமின் பிறந்தநாள் அன்று இறந்துவிட்டார். தன் மகனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு ராஜீவ் நிகம் கூறியிருப்பதாவது,
Samayam Tamil rajeev nigam


என்ன ஒரு சர்பிரைஸ் பிறந்தநாள் பரிசு...என் மகன் தேவ்ராஜ் என்னை விட்டு சென்றுவிட்டார்..பிறந்தநாள் கேக் கூட கட் செய்யாமல்...இது போன்ற பரிசை யார் தருவார் என்று தெரிவித்துள்ளார்.

ராஜீவ் நிகமின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். உங்களின் பிறந்தநாள் அன்று மகன் இறந்தது கொடுமை தான். ஆனால் தைரியமாக இருப்பதை தவிர வேறு வழியில்லை என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தேவ்ராஜுக்கு உடல்நலம் சரியில்லை என்றும், அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளதாகவும், உயிருக்கு போராடுவதாகவும் ராஜீவ் நிகம் கடந்த 2018ம் ஆண்டு தெரிவித்தார். ஆனால் தேவ்ராஜுக்கு என்ன பிரச்சனை என்பதை கூறவில்லை.

ராஜீவ் நிகமின் தந்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தான் மரணம் அடைந்தார். ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன் கெரியரை துவங்கிய ராஜீவ் நிகம் லாஃப்டர் சேலஞ்ச் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். மேலும் காமெடி சர்கஸ் ஜுபிளி ஷோவில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்காக காத்திருக்கணுமானு திட்டிய இயக்குநர்: மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்

அடுத்த செய்தி

டிரெண்டிங்