ஆப்நகரம்

கொரோனா எஃபெக்ட்: யாரும் என் வீட்டுக்கு வந்துடாதீங்க: நடிகர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் ரசிகர்கள் யாரும் இன்று தன் வீட்டிற்கு முன்பு வந்து கூட்டம் கூட்ட வேண்டாம் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Samayam Tamil 15 Mar 2020, 2:11 pm
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மும்பையில் உள்ள தனது பங்களாவான ஜல்சாவின் வாசலில் வந்து நின்று ரசிகர்களை பார்த்து பேசுவார். அவரை பார்ப்பதற்காக வாரம் தோறும் ரசிகர்கள் அங்கு கூடுவார்கள்.
Samayam Tamil amitabh bachchan


தற்போது கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்குமாறும், கூட்டம் கூட்டுவதை தவிர்க்குமாறும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று ரசிகர்கள் யாரும் தன்னை பார்க்க ஜல்சாவுக்கு வர வேண்டாம் என்று அமிதாப் பச்சன் ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று பல மொழி படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வைரஸ் பீதியில் இருப்பதால் பல படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது. வைரஸை விட அது பற்றிய வதந்திகளை கேட்டுத் தான் மக்கள் பயத்தில் உள்ளார்கள். அதனால் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று திரையுலக பிரபலங்கள் சிலர் கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்