ஆப்நகரம்

சூப்பர் ஸ்டார் ஜோடியாக நடிக்க உயர்ந்த நடிகைக்கு ரூ. 15 கோடியாம்

ஷாருக்கான் படத்தில் நடிக்க தீபிகா படுகோனுக்கு ரூ. 15 கோடி சம்பளம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 17 Nov 2020, 6:44 pm
ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஜீரோ படம் படுதோல்வி அடைந்தது. அதன் பிறகு ஷாருக்கான் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
Samayam Tamil deepika padukone


அந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படம் மூலம் தான் தீபிகா பாலிவுட்டில் அறிமுகமானார். ஷாருக்கானும், தீபிகாவும் சேர்ந்து நடித்தால் அந்த படம் ஹிட்டாகும் என்கிற நம்பிக்கை உள்ளது. இந்நிலையில் தான் தீபிகா படுகோனை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

பதான் படத்தில் நடிக்க தீபிகாவுக்கு ரூ. 15 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். பதான் பட ஹீரோயினாக தீபிகா தான் நடிக்க வேண்டும் என்று ஷாருக்கானும், சித்தார்த் ஆனந்தும் விரும்பினார்களாம். படத்தில் தீபிகாவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.
பதானில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜான் ஆபிரகாம் நடிக்கவிருக்கிறார். பதான் தவிர்த்து அட்லீயின் படத்திலும் நடிக்கிறார் ஷாருக்கான். அந்த படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் ஷாருக் நடிக்கிறாராம். ரா அதிகாரியான அப்பா திருடனான தன் மகனை பிடித்து தண்டனை வாங்கிக் கொடுப்பதே கதையாம்.

அட்லீ படம் தவிர்த்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஷாருக்கான். இரண்டு ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த ஷாருக் தற்போது படுபிசியாகிவிட்டார். தீபிகா நடிகையர் திலகம் படம் புகழ் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் பிரபாஸ் 21 படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவிருக்கிறார். அந்த படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் மகாபாரதா படத்தை தயாரித்து, நடிக்கிறார் தீபிகா. அவர் தற்போது ஷகுன் பத்ரா படத்தில் நடித்து வருகிறார். தீபிகா தயாரித்து, நடித்த சாபக் படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் போகவில்லை.

அந்த சூப்பர் ஹிட் படத்தை 108 முறை பார்த்த வாரிசு நடிகை

அடுத்த செய்தி

டிரெண்டிங்