ஆப்நகரம்

ஆகஸ்டில் வெளியாகும் விஷ்ணு வர்தனின் புதிய படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள சேர்ஷா திரைப்படம் அமேசான் பிரைம் தளத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Samayam Tamil 15 Jul 2021, 4:20 pm
தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் விஷ்ணுவர்தன். அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இவர், முதன்முதலாக இந்தியில் சேர்ஷா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
Samayam Tamil Shershaah
Shershaah


அறிந்தும் அறியாமலும், பட்டியல் திரைப்படங்களை தொடர்ந்து அஜித்தை வைத்து இவர் இயக்கிய பில்லா திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இவரை பிரபலமாக்கியது. அதனை தொடர்ந்து சர்வம், இரண்டாவது முறையாக அஜித் நடிப்பில் ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கினார். அதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார் விஷ்ணு வர்தன்.

கார்கில் போரை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் விக்ரம் பத்ரா எனும் ராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்தப்படத்தை தர்மா புரோடக்சன்ஸ் மற்றும் காஷ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது.

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இணையும் பாலிவுட் ஸ்டார்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஜுலையில் வெளியிட திட்ட்மிட்டிருந்தனர் படக்குழுவினர். ஆனால் திரையரங்குகள் இன்னும் திறக்காத காரணத்தால் சேர்ஷா திரைப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுகின்றனர். பெரும் தொகைக்கு அமேசான் பிரைம் வீடியோ படத்தை வாங்கியுள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி படம் வெளியாகு என இன்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விஷ்ணு வர்தனின் முதல் இந்தி படம் என்பதால், தமிழ் ரசிகர்களும் இந்தப்படத்திற்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்