ஆப்நகரம்

4 முறை 'நோ' சொன்ன காதலி, நம்பிக்கையை இழக்காத வாரிசு நடிகர்

தன் வருங்கால மனைவியான நடாஷா தலால் தன்னை 3-4 முறை நிராகரித்துவிட்டதாக நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 24 Dec 2020, 1:36 pm
பிரபல இயக்குநர் டேவிட் தவானின் மகன் வருண் தவான் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். அவர் ஃபேஷன் டிசைனர் நடாஷா தலால் என்பவரை காதலித்து வருகிறார். அவர்களுக்கு நிச்சயம் நடந்துவிட்டது. இருவரும் ஜோடியாக வெளியே செல்லும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகும்.
Samayam Tamil varun dhawan


6ம் வகுப்பு படித்தபோது வருண் தவான் நடாஷாவை முதல் முறையாக பார்த்தார். பல ஆண்டுகளாக நட்பாக பழகி வந்த அவர்கள் பின்னர் காதலர்களாகினர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரின் ரேடியோ நிகழ்ச்சியில் வருண் தவான் கலந்து கொண்டார். அப்பொழுது தன் காதல் பற்றி வருண் கூறியதாவது,

நாங்கள் டேட் செய்யத் துவங்கும் முன்பு நடாஷா என்னை 3-4 முறை நிராகரித்துவிட்டார். ஆனால் நான் நம்பிக்கையை இழக்காமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தேன். நான் 6ம் வகுப்பு படித்தபோது நடாஷாவை முதல்முறையாக பார்த்தேன். அப்பொழுது நாங்கள் டேட் செய்யவில்லை. பிளஸ் 2 முடிக்கும் வரை நண்பர்களாகத் தான் பழகி வந்தோம்.

நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். நான் அவரை பார்த்ததை மறக்கவே முடியாது. நாங்கள் மானெக்ஜி கூப்பர் பள்ளியில் படித்தோம். அவர் எல்லோ ஹவுஸ், நான் ரெட் ஹவுஸ். மதிய உணவு இடைவேளையின்போது கேன்டீனில் உணவும், எனர்ஜி ட்ரிங்கும் கொடுத்தார்கள். அப்பொழுது அவர் நடந்து சென்றார். அவரை நான் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அன்றே எனக்கு அவர் மீது காதல் வந்துவிட்டது என்று உணர்ந்தேன்.

என் அண்ணுக்கு திருமணமானதை பார்த்தபோது எனக்கும் திருமண ஆசை வந்தது என்றார்.

வருண் தவானும், நடாஷாவும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் அவர்களின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வருண் தவான் தன் தந்தையின் இயக்கத்தில் சாரா அலி கானுடன் சேர்ந்து நடித்துள்ள கூலி நம்பர் ஒன் படம் வரும் 25ம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது. வருண் தற்போது ஜுக் ஜுக் ஜீயோ படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டபோது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார்.

காலங்காத்தாலயே பிகினியா?: 'தலைவி'யை விளாசும் நெட்டிசன்ஸ்

அடுத்த செய்தி

டிரெண்டிங்