ஆப்நகரம்

ஐஸ்வர்யா ராய்க்கும், கணவருக்கும் சண்டை வந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

ஐஸ்வர்யா ராய்க்கும், கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே சண்டை வந்தால் யார் முதலில் சாரி சொல்வார்கள் என்கிற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Samayam Tamil 6 Nov 2020, 12:13 pm
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு 9 வயதில் ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார். இந்நிலையில் தி கபில் சர்மா ஷோவில் ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
Samayam Tamil aishwarya rai


அந்த வீடியோவில் கபில் சர்மா ஐஸ்வர்யா ராயை பார்த்து அபிஷேக்குடன் சண்டை போடுவீர்களா என்று கேட்க அவரோ ஆமாம் என்றார். சண்டை போட்டால் யார் முதலில் சாரி சொல்வார்கள் என்று கபில் சர்மா கேட்டார். இதை பார்த்த நவ்ஜோத் சிங் சித்துவோ, இதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது. அபிஷேக் தான் முதலில் சாரி கேட்பார் என்றார்.
View this post on Instagram A post shared by @aishwariarai_georgia on Oct 20, 2020 at 12:32am PDT
அதற்கு ஐஸ்வர்யாவோ, நான் தான் முதலில் சாரி சொல்வேன். சீக்கிரமாக சாரி சொல்லி சண்டையை முடித்துவிடுவேன் என்றார். ஐஸ்வர்யா ராய் கூறியதை கேட்ட கபில் சர்மா, இவ்வளவு அழகான மனைவி தான் முதலில் சாரி சொல்கிறார். இது கடவுள் செய்யும் அதிசயம் என்று கூற ஐஸ்வர்யா ராய் சிரித்தார்.

ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் சேர்ந்து குரு, உம்ரா ஜான், குச் நா கஹோ உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் விளம்பர படங்களிலும் சேர்ந்து நடித்திருக்கிறார்கள். பாலிவுட் கொண்டாடும் ஜோடிகளில் ஒன்று ஐஸ்வர்யா-அபிஷேக் ஜோடி ஆகும்.

பாலிவுட்டில் வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பற்றி பேச்சாக உள்ளது. இந்நிலையில் இது குறித்து அபிஷேக் பச்சன் கூறியதாவது,

என் அப்பா அமிதாப் பச்சன் எனக்காக யாருக்கும் போன் செய்து பரிந்துரைக்கவில்லை. அவர் எனக்காக ஒரு படம் கூட எடுத்தது இல்லை. சொல்லப் போனால், அவர் நடித்த பா படத்தை நான் தயாரித்தேன்.

இது வியாபாரம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். முதல் படம் வெளியான பிறகு உங்களிடம் மக்கள் எதையும் பார்க்காவிட்டாலோ, அந்த படம் ஓடாவிட்டாலோ அடுத்த பட வாய்ப்பு கிடைக்காது. அது தான் உண்மை.

என் படங்கள் சரியாக போகவில்லை என்றால் நான் ஒப்புக் கொண்ட படங்களில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். அபிஷேக்கிற்கு என்னப்பா, அவர் அமிதாப் பச்சன் பையன், சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர் என்கிறார்கள். ஆனால் என்னையும் படங்களில் இருந்து நீக்கியிருக்கிறார்கள் என்றார்.

கெரியரை பொறுத்தவரை அனுராக் பாசு இயக்கத்தில் அபிஷேக் பச்சன் லூடோ படத்தில் குற்றவாளியாக நடித்து முடித்துள்ளார். அந்த படத்தில் ஆதித்யா ராய் கபூர், ராஜ்குமார் ராவ், சான்யா மல்ஹோத்ரா, பாத்திமா சனா ஷேக், ஆஷா நெகி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எப்படினாலும் நீங்க வெட்டி தான் என கலாய்த்தவருக்கு ஐஸ்வர்யா ராய் கணவர் 'நச்' பதில்

அடுத்த செய்தி

டிரெண்டிங்