ஆப்நகரம்

Sakshi Dhoni:தோனியின் மனைவி சாக்ஷியும், கோஹ்லியின் மனைவி அனுஷ்காவும் கிளாஸ்மேட்ஸுனு தெரியுமா?

Anushka Sharma: விராட் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா சர்மாவும், தோனியின் மனைவி சாக்ஷியும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 30 May 2023, 3:06 pm

ஹைலைட்ஸ்:

  • வைரலாகும் சாக்ஷி, அனுஷ்கா சர்மா புகைப்படம்
  • ஒரே பள்ளியில் படித்த சாக்ஷி, அனுஷ்கா சர்மா
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil anushka Sharma
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மே 29ம் தேதி இரவு ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது சென்னை அணி. இந்நிலையில் தோனியின் மனைவி சாக்ஷியின் பழைய புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், சாக்ஷி தோனியும் அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் பள்ளியில் சேர்ந்து படித்திருக்கிறார்கள். இருவரும் ஒரே வகுப்பில் படித்துள்ளனர். அனுஷ்காவின் தந்தையான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான அஜய் குமார் சர்மாவுக்கு அஸ்ஸாமில் போஸ்டிங் போட்டிருக்கிறார்கள்.
அப்பொழுது தான் அங்கிருக்கும் புனித மேரி பள்ளியில் மகளை சேர்த்திருக்கிறார் அஜய் குமார் சர்மா. அதே பள்ளியில் தான் சாக்ஷி சிங் படித்திருக்கிறார். பள்ளி விழாவின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
மற்றொரு புகைப்படத்தில் சக மாணவ, மாணவியருடன் இருக்கிறார்கள் அனுஷ்காவும், சாக்ஷியும். இன்னொரு புகைப்படத்தில் நண்பர்களுடன் போஸ் கொடுத்திருக்கிறார்கள்.

சாக்ஷின் தோனி குறித்து அனுஷ்கா சர்மா பேட்டி ஒன்றில் கூறியதாவது,

சாக்ஷியும், நானும் அஸ்ஸாமில் இருக்கும் ஒரு சிறிய ஊரில் வசித்தோம். அஸ்ஸாமில் எங்கே இருந்தோம் என்பதை சாக்ஷி தெரிவித்தார். அதை கேட்ட நானோ, நானும் அதே ஊரில் தான் இருந்தேன் என்றேன். அதன் பிறகு தான் படித்த பள்ளியின் பெயரை கூறினார். நானும் அந்த பள்ளியில் தான் படித்தேன் என்று சாக்ஷியிடம் கூறினேன்.

அதன் பிறகே பழைய புகைப்படம் ஒன்றை பார்த்தேன். அதில் சாக்ஷி சிங் தேவதை போன்று கெட்டப்பில் இருந்தார். நான் காக்ரா அணிந்து எனக்கு பிடித்த மாதுரி தீக்ஷித் போன்று இருந்தேன். அது மாறுவேட போட்டியின்போது எடுக்கப்பட்டது என்றார்.

அடடே, கோஹ்லியின் மனைவியும், தோனியின் மனைவியும் தோழிகள் என்பது தெரியாமல் போச்சே என்கிறார்கள் ரசிகர்கள். கணவர் தோனியின் கெரியருக்கு ஆதரவாக இருந்து வருகிறார் சாக்ஷி.

இந்நிலையில் பாலிவுட் படங்களில் நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்கிறார் அனுஷ்கா சர்மா. சாக்ஷிக்கு ஜிவா என்கிற மகள் இருக்கிறார். அனுஷ்கா சர்மாவுக்கு வாமிகா என்கிற மகள் இருக்கிறார்.

சாக்ஷியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தோனி. அனுஷ்கா சர்மா, கோஹ்லியின் காதல் கதை மிகவும் பிரபலமாகும். ஒரு கட்டத்தில் அனுஷ்காவும், கோஹ்லியும் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தார்கள். அப்பொழுது கோஹ்லி தான் அனுஷ்காவின் சகோதரர் மூலம் அவரை சமாதானம் செய்து திருமணம் செய்து கொண்டார் என அப்பொழுது செய்திகள் வெளியாகின.

பாலிவுட் கொண்டாடும் ஜோடிகளில் அனுஷ்கா-கோஹ்லி ஜோடியும் ஒன்று. இருவரும் சேர்ந்து விளம்பர படங்களில் நடித்து வருகிறார்கள்.

பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் அனுஷ்கா சர்மா கலந்து கொண்டார். அவர் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும்.

Dhanush:செம குஷியில் விக்னேஷ் சிவன், தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், உதய்ணா: காரணம் தல

இதற்கிடையே சி.எஸ்.கே. வெற்றியால் சாக்ஷியை பற்றி தல தோனி ரசிகர்கள் பெருமையாக பேசி வருகிறார்கள்.
எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்