ஆப்நகரம்

காதலர் துரோகம் செய்துவிட்டார்: மேலும் ஒரு பிக் பாஸ் பிரபலத்தின் காதலும் முறிவு

தன் காதலர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக பிக் பாஸ் பிரபலம் சனா கான் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Feb 2020, 5:01 pm
தன் காதலர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக பிக் பாஸ் பிரபலம் சனா கான் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil he cheated me says sana khan
காதலர் துரோகம் செய்துவிட்டார்: மேலும் ஒரு பிக் பாஸ் பிரபலத்தின் காதலும் முறிவு


சனா கான்

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து வருபவர் சனா கான். பிக் பாஸ் 12 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அவர் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. இது குறித்து சனா கான் அதிர்ச்சியூட்டும் தகவல்களை அளித்துள்ளார்.

துரோகம்

காதல் முறிவு குறித்து சனா கான் கூறியதாவது, மெல்வின் எனக்கு துரோகம் செய்ததால் அவரை விட்டு பிரிந்தேன். நான் அவரை முழுமனதாக காதலித்தேன். ஆனால் அவர் பதிலுக்கு செய்த காரியம் என்னை அதிர வைத்துவிட்டது. அதனால் நான் மனஅழுத்தத்தில் இருக்கிறேன். ஓராண்டுக்கு முன்பு சந்தித்தோம். முதலில் அனைத்தும் நன்றாகத் தான் சென்றது. ஆனால் அதன் பிறகு சிறு, சிறு விஷயங்களுக்காக சண்டை ஏற்பட்டது என்கிறார் சனா கான்.

காதல் முறிவு

சண்டை வருவது எல்லாம் சாதாரணம். ஆனால் 8 மாதங்கள் பழகிய பிறகு மெல்வின் மற்றவர்களை ஏமாற்றுவதாக கேள்விப்பட்டேன். அவரிடம் கேட்டால் மற்றவர்கள் தன் மீது பொறாமையில் பேசுவதாக கூறினார். அவர் ஏதோ செய்கிறார் என்று எனக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தோன்றியது. அவரின் செல்போனை எடுத்தபோது வேகமாக வந்து பறித்து மெசேஜ்களை டிலீட் செய்தார். அப்பொழுது தான் மற்றவர்கள் அவரைப் பற்றி கூறியது உண்மை என்பது எனக்கு புரிந்தது. இதையடுத்து காதலை முறித்தேன் என்று சனா தெரிவித்துள்ளார்.

கள்ளத்தொடர்பு

மெல்வின் ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார். அந்த பெண் யார் என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் பெயரை வெளியிடுவது சரியில்லை. கடந்த 2019ம் ஆண்டு எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அப்பொழுது மெல்வின் என்னை கண்டுகொள்ளவே இல்லை. இப்படி ஒரு உறவில் இருந்து கடவுள் என்னை காப்பாற்றியதில் எனக்கு மகிழ்ச்சி. நான் அவரை திருமணம் செய்ய விரும்பினேன். இனி எந்த ஆண் மீதும் நம்பிக்கை ஏற்படும் என்று எனக்கு தோன்றவில்லை என்று சனா கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்