ஆப்நகரம்

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊத்த விரும்பல: கமல் மகள் பற்றி மாஜி காதலர்

அக்ஷரா ஹாசனுடனான காதல் பற்றி கேட்டதற்கு நடிகர் தனுஜ் விர்வானி சூசகமாக பதில் அளித்துள்ளார்.

Samayam Tamil 24 May 2022, 3:45 pm

ஹைலைட்ஸ்:

  • அக்ஷரா ஹாசனை காதலித்த தனுஜ்
  • இந்தி படங்களில் நடித்து வரும் தனுஜ்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil tanuj viwani
உலக நாயகன் கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷராவும், பிரபல நடிகை ரதியின் மகன் தனுஜ் விர்வானியும் காதலித்தார்கள். பின்னர் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
அக்ஷராவின் அந்தரங்க புகைப்படங்கள் கசிந்து வைரலானபோது அதற்கு தனுஜ் தான் காரணம் என்று பேச்சு கிளம்பியது. தனக்கும், அந்த புகைப்படக் கசிவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தனுஜ் விளக்கம் அளித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் இது அக்ஷராவுக்கே தெரியும், ஆனால் அவர் ஏன் அதை வெளியே சொல்லவில்லை என தெரியவில்லை என்றார். இன்னும் கூட அந்த வைரல் புகைப்படங்கள், அக்ஷராவுடனான காதல் பற்றி தனுஜிடம் கேட்கப்படுகிறது.

அப்படி அண்மையில் அவரிடம் அக்ஷரா ஹாசன் பற்றி கேட்கப்பட்து. மேலும் நடிகை ஜெனிஃபர் விங்கெட்டுடனும் உங்களின் பெயர் அடிபட்டதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தனுஜ் கூறியதாவது,

சிலநேரம் ஒருவரை காதலித்தால், அது குறித்து எதுவும் பேசப்படுவது இல்லை. சிலநேரம் யாரையும் காதலிக்காதபோது, தோழியுடன் சேர்த்து வைத்து பேசுகிறார்கள்.

யூகிப்பது மீடியாவின் வேலை. அது நிஜமா என்று வியப்பது ரசிகர்களின் வேலை. எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற விரும்பவில்லை. என் வாழ்க்கையின் சில விஷயங்களை பாதுகாக்க விரும்புகிறேன். ஒரு சாதாரண ஆளாக வாழ விரும்புகிறேன் என்றார்.

பிரிந்தது போதும்: முத்தம் கொடுத்து நடிகையுடனான காதலை புதுப்பித்த இளம் நடிகர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்