ஆப்நகரம்

போதும், நிறுத்திக்கலாம்: வாரிசு நடிகருடனான காதலை முறித்த ஸ்ரீதேவி மகள்

ஸ்ரீதேவியின் மூத்த மகளும், அவரின் காதலரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 12 Feb 2020, 12:28 pm
ஸ்ரீதேவியின் மூத்த மகளும், அவரின் காதலரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
Samayam Tamil janhvi kapoor ishaan khatter no longer a couple
போதும், நிறுத்திக்கலாம்: வாரிசு நடிகருடனான காதலை முறித்த ஸ்ரீதேவி மகள்


ஜான்வி, இஷான் காதல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் இந்தி படம் மூலம் நடிகையானார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த இஷான் கட்டாருக்கும், அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. (பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி தான் இஷான்) படம் ரிலீஸான பிறகும் இருவரும் ஜோடியாக ஊர் சுற்றினார்கள். காதலை இருவரும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் காதலிப்பதாக பாலிவுட்காரர்கள் பேசினார்கள்.

காதல் முறிவு

இஷான் கட்டாரை காதலிக்கிறீர்களா என்று நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அப்படி எல்லாம் இல்லை என்றார். ஆனால் இஷான் எப்பொழுது பார்த்தாலும் ஜான்வியுடன் தான் இருப்பார் என்று அண்ணன் அர்ஜுன் கபூர் உண்மையை போட்டுடைத்தார். இஷான், ஜான்வி காதலை போனி கபூரும் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஜான்வி, இஷான் காதல் முறிந்துவிட்டதாம்.

வேலை இருக்கு

இந்த காதல் செட்டாகாது என்று ஜான்வி தான் இஷானிடம் கூறினாராம். படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போவதால் காதலை முறித்துக் கொண்டுள்ளாராம். காதல் முறிவுக்கு பிறகு இஷான் ஒரு இடத்திற்கு சென்றபோது அங்கு ஜான்வியை பார்த்ததும் அசவுகரியமாக ஃபீல் செய்தாராம். முன்னதாக நடிகை சாரா அலி கான் படங்களில் கவனம் செலுத்த வசதியாக நடிகர் கார்த்திக் ஆர்யனுடனான காதலை முறித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி கோவில்

காதல் முறிவுக்கு பிறகு ஜான்வி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுள்ளார். கோவிலுக்கு அவர் பாவாடை, தாவணி அணிந்து சென்றார். ஸ்ரீதேவிக்கு தன் மகள்கள் தமிழ் கலாச்சாரப்படி உடை அணிவது பிடிக்கும். அதனால் தான் அம்மா செல்லமான ஜான்வி கோவிலுக்கு செல்லும்போது எல்லாம் பாவாடை, தாவணி அணிகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்