ஆப்நகரம்

காட்ஃபாதர் சொன்னதால் சூப்பர் ஸ்டாருக்கு ஓகே சொன்ன ஸ்ரீதேவி மகள்

பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தயாரிக்கவிருக்கும் படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜான்வி கபூர்.

Samayam Tamil 18 Mar 2021, 5:35 pm

ஹைலைட்ஸ்:

  • மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்
  • கரண் ஜோஹருக்காக மகேஷ் பாபுவுடன் நடிக்கும் ஸ்ரீதேவி மகள்
  • டோலிவுட்டில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil mahesh babu
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் படம் மூலம் நடிகையானார். பாலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகையான ஜான்விக்கு பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தான் காட்ஃபாதராக இருந்து வருகிறார்.
ஸ்ரீதேவி இறந்த பிறகு ஜான்வியின் கெரியரை பிக்கப் செய்ய வைக்க கரண் ஜோஹர் உதவி செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் மகேஷ் பாபுவை வைத்து ஒரு தெலுங்கு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார் கரண். அந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை இளம் இயக்குநர் ஒருவர் இயக்குவாராம். படத்தை ஒரே ஷெட்யூலில் 60 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். முன்பும் கூட மகேஷ் பாபு படத்தில் நடிக்க ஜான்விக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் கரண் ஜோஹருக்காக மகேஷ் பாபு ஜோடியாகிறார்.

மகேஷ் பாபு தற்போது சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கீத கோவிந்தம் படம் புகழ் பரசுராம் இயக்கும் அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் ஹீரோயின். சார்காரு வாரி பாட்டா படத்தை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் மகேஷ் பாபு.

இந்நிலையில் ராஜமவுலியின் படத்தில் நடிப்பதற்கு முன்பு கரண் ஜோஹர் தயாரிக்கும் படத்தில் நடிக்கப் போகிறாராம் மகேஷ் பாபு. இதற்கிடையே மகேஷ் பாபு, ஜான்வி இடையேயான வயது வித்தியாசம் குறித்து பேச்சு கிளம்பியிருக்கிறது.

அது ஒரு புறம் இருக்க மறுபுறமோ மகேஷ் பாபு, ஜான்வி கெமிஸ்ட்ரி பற்றி பேசத் துவங்கிவிட்டார்கள் தெலுங்கு ரசிகர்கள். மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருக்கிறார். இந்நிலையில் அவரின் மகள் கிருஷ்ணாவின் மகனுடன் நடிக்கப் போகிறார். அதனால் பெற்றோர் போன்று வாரிசுகளுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகுமா என ரசிகர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்