ஆப்நகரம்

ஸ்ரீதேவி மீது மூத்த மகள் ஜான்விக்கு இம்புட்டு பாசமா?

ஜான்வி கபூர் தான் சிறுமியாக இருந்தபோது அம்மா ஸ்ரீதேவி மீது ஓவர் பொசசிவாக இருந்துள்ளார்.

Samayam Tamil 11 May 2020, 5:38 pm
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் செல்லம் அவரின் மூத்த மகளும், நடிகையுமான ஜான்வி கபூர். தான் இல்லாமல் ஜான்வியால் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று ஸ்ரீதேவி முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
Samayam Tamil janhvi kapoor


ஸ்ரீதேவி இறந்ததில் இருந்து அவரின் புகைப்படங்களை ஜான்வியும், இளைய மகள் குஷி கபூரும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அன்னையர் தினத்தை முன்னிட்டு ஜான்வி தான் கைக்குழந்தையாக இருந்தபோது அம்மாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

ஜான்வி இன்ஸ்டாகிராமில் மேலும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் ஸ்ரீதேவி குஷியை கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுக்க ஜான்வி பின்னால் இருந்து சிரிக்கிறார்.
ஸ்ரீதேவி குஷியை கட்டிப்பிடிப்பதைக் கூட தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஜான்வி தெரிவித்துள்ளார். தற்போது ஊரடங்கால் வீட்டில் முடங்கியிருக்கும் ஜான்வி தங்கை குஷியுடன் சேர்ந்து சேட்டை செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

குஷி தன் அப்பா போனி கபூர் செல்லம். குஷி போனி கபூர் மீது சாய்ந்தபடி தூங்கியபோது எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது. அம்மா, அக்கா வழியில் நடிகையாக விரும்பும் குஷி அமெரிக்காவில் படித்து வருகிறார்.

முன்னதாக குஷி அமெரிக்கா கிளம்பியபோது அப்பா அழுவாரே என்று ஜான்வி பயந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீ காசு தருவியா?: அன்னையர் தினத்தில் அம்மாவை அதிர வைத்த ஹீரோ

அடுத்த செய்தி

டிரெண்டிங்