ஆப்நகரம்

நாங்களும் செய்வோம்ல: நடிகைகளை அதிர வைத்த ஹேன்ட்சம் ஹீரோ

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர் உள்ளாடையாவது அணிந்திருக்கிறாரா இல்லையா என்று தீவிரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 3 Mar 2021, 7:03 pm
ஜான் ஆபிரகாம் தான் ஆடையில்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்த பலரும் வியந்து போயிருக்கிறார்கள்.
Samayam Tamil john abrahams latest picture amazes fans
நாங்களும் செய்வோம்ல: நடிகைகளை அதிர வைத்த ஹேன்ட்சம் ஹீரோ


ஜான் ஆபிரகாம்

ஜிம் பாடியை காட்டி மிரட்டும் பாலிவுட் நடிகர்களில் ஒருவர் ஜான் ஆபிரகாம். மாடலாக இருந்து நடிகராக மாறியவர். படங்களில் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். அஜித்தை போன்று சூப்பர் பைக் பிரியர். தன் வீட்டு கராஜில் ஏகப்பட்ட பைக்குகள் வைத்திருக்கிறார். அந்த பைக்குகளின் புகைப்படத்தை பார்த்தவர்கள் அசந்தே போனார்கள். மேலும் தனது ஒர்க்அவுட் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

வைரல் புகைப்படம்

ஜான் ஆபிரகாம் தற்போது ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் இந்தி படத்தில் நடித்து வருகிறார். மோஹித் சூரித் இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான ஏக் வில்லன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இது. ஏக் வில்லன் ரிட்டர்ன்ஸ் படத்தில் திஷா பதானி, தாரா சுதாரியா ஆகியோரும் நடிக்கிறார்கள். படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் படப்பிடிப்பில் தனக்கு வர வேண்டிய உடைக்காக காத்திருந்தபோது எடுத்த புகைப்படத்தை ஜான் ஆபிரகாம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

பப்ளிசிட்டி

அந்த புகைப்படத்தில் ஜான் ஆபிரகாம் உடை எதுவும் அணியாமல் தலையணையை வைத்து மானத்தை மறைத்தபடி அமர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகைகளோ, வாவ், செம ஜிம் பாடி, என்ன ஒரு ஸ்மைல் என்று சைட் அடித்துள்ளனர். மற்றவர்களோ ஜான் ஆபிரகாம் உள்ளாடையாவது அணிந்திருக்கிறாரா இல்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஹீரோயின்கள் மட்டும் தான் ஆடை அணியாமல் புகைப்படம் எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்களா என்பது போன்று இருக்கிறது ஜான் ஆபிரகாம் செய்த காரியம். அவர் புகைப்படம் வெளியிட்டது வீண் போகவில்லை. செம பப்ளிசிட்டி கிடைத்துவிட்டது.

வலிமை

முன்னதாக ஜான் ஆபிரகாம் அஜித்துடன் வீடியோ காலில் பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலானது. அதை பார்த்தவர்கள் ஒரு வேளை ஜான் ஆபிரகாம் வலிமை படத்தில் நடிக்கிறாரோ என்று பேசத் துவங்கினார்கள். இருவரும் பைக் பிரியர்கள், அதனால் சூப்பர் பைக் பற்றி தான் பேசியிருப்பார்கள் என்று ரசிகர்களாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்