ஆப்நகரம்

25 வயசாச்சு, சம்பாத்தியமே இல்லை: சூப்பர் ஸ்டார் பட பிரபலம்

ஷாருக்கானின் கல் ஹோ நா ஹோ படத்தில் குழந்தை நட்சத்திரமாக வந்த ஜானக் சுக்லாவின் தற்போதைய நிலை குறித்து தான் சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 4 Mar 2021, 4:32 pm
கல் ஹோ நா ஹோ படத்தில் வந்த ஜானக் சுக்லா தற்போது சம்பாத்தியமே இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil kal ho na ho jhanak shuklas video goes viral
25 வயசாச்சு, சம்பாத்தியமே இல்லை: சூப்பர் ஸ்டார் பட பிரபலம்


கல் ஹோ நா ஹோ

நிகில் அத்வானி இயக்கத்தில் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா, சயிஃப் அலி கான், சோனாலி பிந்த்ரே உள்ளிட்டோர் நடித்த கல் ஹோ நா ஹோ படம் கடந்த 2003ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படத்தில் ப்ரீத்தி ஜிந்தாவின் தங்கையாக ஜானக் சுக்லா நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக அவர் பலரையும் கவர்ந்தார். நடிகை சுப்ரியா சுக்லாவின் மகளான ஜானக் கரிஷ்மா கா கரிஷ்மா என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரோபோ கரிஷ்மாவாக வந்து அனைவரையும் அசத்தினார்.

ஜானக் சுக்லா

ஷாருக்கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன் போன்றோருடன் சேர்ந்து நடித்த குழந்தை நட்சத்திரங்கள் தற்போது வளர்ந்து பெரியவர்களாகிவிட்டனர். அதில் ஒரு சிலருக்கு திருமணமும் நடந்துவிட்டது. இந்நிலையில் தான் ஜானக் சுக்லா தன் நிலைமை குறித்து பேசிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் ஜானக் கூறியிருப்பதாவது, எனக்கு 15 வயதானபோது நடிப்பில் இருந்து பிரேக் எடுத்தேன். ஆனால் நான் ஏற்கனவே ரிட்டையர் ஆகிவிட்டது போன்று இருக்கிறது. நான் வேலை செய்யாததால் அப்படி இருக்கிறது என்று அப்பாவும், அம்மாவும் சொல்கிறார்கள். நான் ஜாலியாக இருக்கிறேன். ஊர் சுற்றுகிறேன். சில சமயம் எழுதுகிறேன். நான் முதுகலை பட்டம் பெற்றுவிட்டேன் என்றார்.

சினிமா

நடிப்பு பிடிக்காமல் தான் கேமராவுக்கு முன்பு வருவது இல்லையா என்று ஜானக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, எனக்கு நடிக்க பிடிக்காமல் இல்லை. அப்பொழுது எனக்கு 15 வயது தான். அதனால் பிரேக் எடுத்தேன். நான் குழந்தை பருவத்தில் நிறைய வேலை செய்துவிட்டேன். நடித்து வந்ததுடன் தினமும் பள்ளிக்கு சென்றேன், வீட்டுப் பாடம் எழுதினேன். இருப்பினும் என் குழந்தை பருவத்தின் ஒரு பகுதியை மிஸ் செய்துவிட்டேன். அதனால் நடிப்பில் இருந்து பிரேக் எடுக்குமாறு பெற்றோர் கூறினார்கள் என்றார்.

சம்பாத்தியம்

வேலை பற்றி ஜானக் கூறியதாவது, எனக்கு 24 வயதாகும்போது நிறைய சம்பாதிப்பேன், திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவேன் என்று சிறுபிள்ளையாக இருந்தபோது நினைத்தேன். ஆனால் தற்போது எனக்கு வயது 25 ஆகிவிட்டது, ஒன்னும் சம்பாதிக்கவில்லை. ஆனால் என் பெற்றோர் ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்