நடனத்திற்கு பெயர் போன பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்தின் இளைய மகன் ரயன் நீளமான தலைமுடி வைத்திருந்தார். அதை பார்த்து பலர் கிண்டல் செய்தார்கள். இது ஆணா, பெண்ணா என்று கலாய்த்தார்கள். ரயன் நீளமான தலைமுடியில் மாதுரி போன்று இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் ரயன் தலைமுடியை நீளமாக வளர்த்தற்கான காரணம் தற்போது தான் தெரிய வந்திருக்கிறது.
அவர் புற்றுநோயாளிகளுக்கு தானம் செய்யவே கடந்த 2 ஆண்டுகளாக தலைமுடியை நீளமாக வளர்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தன்று ரயன் தன் தலைமுடியை வெட்டி தானம் கொடுத்துவிட்டார்.
ரயன் தன் தலைமுடியை சலூனுக்கு சென்று வெட்டியபோது அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மாதுரி தீக்ஷித்.
புற்றுநோயாளிகள் படும் அவதியை பார்த்து ரயன் தன்னால் முடிந்த உதவியை செய்திருப்பதை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் ரயனின் வீடியோவை பலரும் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர் நீளமாக முடி வளர்த்ததற்காக கிண்டல் செய்தவர்கள் தற்போது உண்மை தெரிய வந்ததும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.