ஆப்நகரம்

Heeraben Modi: 100 வயது தாயை இழந்து வாடும் பிரதமர் மோடி: 'தலைவி', பிரபலங்கள் இரங்கல்

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் காலமானது குறித்து அறிந்த திரையுலக பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil 30 Dec 2022, 10:37 am
Heeraben Modi Death:பிரமதமர் மோடியின் அம்மா மரணம் அடைந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Samayam Tamil pm narendra modis mother heeraben no more celebs offer condolences
Heeraben Modi: 100 வயது தாயை இழந்து வாடும் பிரதமர் மோடி: 'தலைவி', பிரபலங்கள் இரங்கல்



ஹீராபென்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் குஜராத்தில் வசித்து வந்தார். 100 வயதான அவரின் உடல்நலம் மோசமடைந்ததை அடுத்து அகமதாபாத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த உடன் அகமதாபாத் கிளம்பிச் சென்றார் மோடி.

Twitter-ANI

இறுதிச்சடங்கு

தன் தாயின் உடலுக்கு மோடி அஞ்சலி செலுத்தினார். மேலும் தாயின் இறுதிச் சடங்கை செய்தார். தாயை இழந்து வாடும் பிரதமர் மோடிக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகிறார்கள். மேலும் ஹீராபென் மோடியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

Twitter-ANI

மோடி

அம்மா ஹீராபென் காலமானது குறித்து அவரின் புகைப்படத்துடன் ட்வீட் செய்திருக்கிறார் மோடி. ஹீராபென்னின் மறைவு குறித்து அறிந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் கூறியிருப்பதாவது, இந்த கடினமான நேரத்தில் பிரதமர் அவர்களுக்கு இறைவன் பொறுமையும், அமைதியும் கொடுப்பாராக. ஓம் சாந்தி என்று தெரிவித்துள்ளார். மேலும் ஹீராபென் தன் மகனுக்கு பாசமாக உணவு ஊட்டிவிடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Twitter-Narendra Modi

சோனு சூத்

இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சோனு சூத் கூறியிருப்பதாவது, மரியாதைக்குரிய மோடிஜி. அம்மா எங்கும் செல்வது இல்லை. ஆனால் தன் மகன் அடுத்தவர்களுக்காக சிறப்பாக செயல்பட பல நேரங்களில் கடவுளின் பாதம் அருகே அமர்வார். உங்கள் அம்மா எப்பொழுதுமே உங்களுடன் தான் இருப்பார். ஓம் சாந்தி என தெரிவித்துள்ளார்.

Twitter-sonu sood

கபில் சர்மா

கபில் சர்மா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மரிதையாதைக்குரிய நரேந்திர மோடிஜி. ஒரு தாய் இந்த உலகை விட்டுச் செல்வது மிகவும் வேதனையானது. அவரின் ஆசி என்றுமே உங்களுக்கு உண்டு. அவர் கடவுளின் பாதத்தில் சேர பிரார்த்தனை செய்கிறோம். ஓம் சாந்தி என்றார்.

Twitter-Kapil Sharma

அஜய் தேவ்கன்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ட்வீட் செய்திருப்பதாவது, திருமதி ஹீராபென் மோடி மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எளிமையான அவர் ஒரு அருமையான மகனை வளர்த்திருக்கிறார். நம் பிரதமர் மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

Twitter-Ajay Devgn

குஷ்பு

குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, திருமதி ஹீராபென் மோடிஜி, நம் பிரதமர் மோடியின் தாயார் இறந்தது அறிந்து மிகுந்த கவலை அடைந்தேன். ஒரு இந்தியனாக, தாயாக, இந்த துயர நேரத்தில் பிரதமர் பக்கம் நிற்கிறேன். அவரின் இழப்பால் இந்த நாடே வருத்தம் அடைந்திருக்கிறது. ஓம் சாந்தி என்றார்.

Twitter-KhushbuSundar

எழுத்தாளர் பற்றி
ஷமீனா பர்வீன்
டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்