ஆப்நகரம்

இந்த ராத்திரி என் கூட: நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல தயாரிப்பாளர்

பிரபல தென்னிந்திய தயாரிப்பாளர் ஒருவர் தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக நடிகை நீனா குப்தா தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். அந்த தயாரிப்பாளர் யார் என்று பலரும் நீனாவிடம் கேட்கிறார்கள்.

Samayam Tamil 18 Jun 2021, 4:28 pm
பிரபல தென்னிந்திய தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்று நீனா குப்தா தன் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil popular south indian producer asked neena gupta to spend the night with him
இந்த ராத்திரி என் கூட: நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல தயாரிப்பாளர்


நீனா குப்தா

பிரபல பாலிவுட் நடிகை நீனா குப்தா சச் கஹூன் தோ என்கிற பெயரில் தன் சுயசரிதையை எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தில் அவர் பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிவித்துள்ளார். பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது குறித்தும் எழுதியிருக்கிறார். அப்படி தன்னை ஒரு பிரபல தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தது பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல்

அந்த புத்தகத்தில் நீனா குப்தா எழுதியிருப்பதாவது, பிரபல தென்னிந்திய தயாரிப்பாளர் ஒருவரை ஹோட்டலில் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த ஹோட்டல் ப்ரித்வி தியேட்டருக்கு அருகில் இருந்தது. அதனால் என் வேலை முடிந்ததும் செல்ல முடிவு செய்தேன். ஹோட்டல் லாபியில் இருந்து தயாரிப்பாளருக்கு போன் செய்தேன். அவரோ என்னை தன் அறைக்கு வருமாறு கூறினார். அறைக்கு செல்லாதே நீனா என்று என் மனம் எச்சரித்தது. அவரை லாபிக்கு வரச் சொல்ல நினைத்தேன். ஆனால் பட வாய்ப்பு போய்விடுமோ என்று நினைத்து நான் அவரின் அறைக்கு சென்றேன் என்றார்.

படுக்கை

அறைக்குள் சென்றதும் என்னை சோஃபாவில் அமரச் சொல்லிவிட்டு, தான் பல ஹீரோயின்களை தென்னிந்திய மொழி படங்களில் அறிமுகம் செய்து வைத்தது குறித்து மணிக்கணக்கில் அவர் பேசினார். சரி சார், என் கதாபாத்திரம் என்னவென்று கேட்டதற்கு ஹீரோயினின் தோழி என்றார். அவர் கதாபாத்திரத்தை விளக்கியபோது அதற்கு முக்கியத்துவம் இல்லை என்பது புரிந்தது. இதையடுத்து நான் கிளம்புகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர் அதிர்ச்சி அடைந்து செல்கிறீர்களா, எங்கே என்று கேட்டார். இன்று இரவு என்னுடன் இருக்க மாட்டீர்களா என்று தயாரிப்பாளர் கேட்டார் என நீனா தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதிர்ச்சி

யாரோ ஒரு பக்கெட் நிறைய ஐஸ் வாட்டரை என் தலையில் ஊற்றியது போன்று உணர்ந்தேன். என் ரத்தம் உறைந்துவிட்டது. என் பையை என்னிடம் கொடுத்து கிளம்பணும் என்றால் கிளம்புங்கள், உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று தயாரிப்பாளர் கூறினார். இது தான் சான்ஸ் என்று நான் அங்கிருந்து ஓடி வந்துவிட்டேன் என்றார் நீனா. முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸை காதலித்து திருமணமாகாமலேயே கர்ப்பமாகி, குழந்தை பெற்று, அதை தனி ஆளாக வளர்த்தது குறித்தும் நீனா அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்