ஆப்நகரம்

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்: பிரபல நடிகை விளக்கம்

கர்ப்பமானதால் வைபவ் ரேகியை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பாலிவுட் நடிகை தியா மிர்சா விளக்கம் அளித்திருக்கிறார்.

Samayam Tamil 8 Apr 2021, 5:34 pm
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானது குறித்து சமூக வலைதளவாசி கேட்ட கேள்விக்கு நடிகை தியா மிர்சா பதில் அளித்துள்ளார்.
Samayam Tamil pregnancy before wedding dia mirza explains
திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்: பிரபல நடிகை விளக்கம்


தியா மிர்சா

பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா வைபவ் ரேகி என்பவரை காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இது தியா, வைபவ் இருவருக்குமே இரண்டாவது திருமணமாகும். முதல் திருமணம் மூலம் வைபவுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் தியா, வைபவ் மற்றும் அவரின் மகள் மாலத்தீவுகளுக்கு சென்றார்கள். அங்கு தியாவும், வைபவின் மகளும் நீச்சல் குளத்தில் சேர்ந்து எடுத்த புகைப்படம் வெளியாகி வைரலானது. தன் மகளுக்கு இன்னொரு தாய் கிடைத்துவிட்டதாக வைபவின் முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.

கர்ப்பம்

தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த 1ம் தேதி சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு அறிவித்தார் தியா. மாலத்தீவுகளில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். மற்றவர்களோ, வயிறு ரொம்ப பெரிதாக இருக்கிறதே, கர்ப்பமான பிறகு தான் திருமணம் நடந்திருக்கும் போன்று என்றார்கள். சமூக வலைதளவாசி ஒருவரோ, பெண் பூசாரியை வைத்து திருமணத்தை நடத்தி வழக்கத்தை மாற்றிய தியா, தான் கர்ப்பமாக இருப்பதை ஏன் திருமணம் செய்து கொள்வத்றகு முன்பே தெரிவிக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாவது வழக்கம் தானே. திருமணத்திற்கு முன்பு பெண்கள் கர்ப்பமாகக் கூடாதா என்றார்.

விளக்கம்

சமூக வலைதளவாசியின் கமெண்ட்டை பார்த்த தியா மிர்சா கூறியிருப்பதாவது, சுவாரஸ்யமான கேள்வி. நான் கர்ப்பமானதால் நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. எங்கள் வாழ்க்கையை சேர்ந்து வாழ விரும்பியதால் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தபோது தான் நான் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதனால் கர்ப்பத்தால் இந்த திருமணம் நடக்கவில்லை. இது பாதுகாப்பானது(மருத்துவ காரணங்கள்) என்பது தெரியும் வரை நாங்கள் கர்ப்பம் குறித்து அறிவிக்க விரும்பவில்லை. இது தான் என் வாழ்வில் சந்தோஷமான செய்தி. இது நடக்க வேண்டும் என்று பல ஆண்டுகள் காத்திருந்தேன். மெடிக்கலை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் நான் இதை மறைக்கவில்லை என்றார்.

குழந்தை

இந்த கேள்விக்கு பதில் அளிப்பது ஏனென்றால்,

1. குழந்தை பெறுவது வாழ்வின் மிக அழகான பரிசு.

2. இந்த அழகிய பயணத்தில் எந்த வெட்கமும் இருக்கக் கூடாது.

3. பெண்களாகிய நாம் எப்பொழுதும் நம் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

4. தனியாக இருந்தோ அல்லது திருமண பந்தத்திலோ தாயாவது நம் விருப்பம்.

5. இது சரியா, தவறா என்பதை பார்க்காமல் இது நியாயமா, இல்லையா என்று கேட்க பழக வேண்டும் என்று தியா இன்ஸ்டாகிராமில் விளக்கம் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்