ஆப்நகரம்

லாக்டவுனில் ஓடி, ஓடி உதவி செய்த வில்லன் நடிகருக்கு ஐ.நா. விருது

லாக்டவுன் நேரத்தில் பலருக்கும் உதவி செய்த பாலிவுட் நடிகர் சோனு சூதுக்கு மனித நேயத்திற்கான ஐ.நா. விருது கிடைத்துள்ளது.

Samayam Tamil 30 Sep 2020, 12:04 pm
இந்தி, தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் சோனு சூத். படங்களில் வில்லனாக நடித்து அனைவரிடமும் திட்டு வாங்கும் சோனு சூத் நிஜத்தில் ஒரு ஹீரோ. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து மும்பையில் சிக்கித் தவித்த பலரை தன் செலவில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
Samayam Tamil sonu sood


மேலும் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டு நாடு திரும்ப முடியாமல் இருந்த பல மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தார். தன்னிடம் யார் வந்து உதவி கேட்டாலும் செய்கிறார். மேலும் யாராவது வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்படுவது குறித்து சமூக வலைதளங்களில் பார்த்தாலும் உடனே உதவி செய்கிறார் சோனு.

எருதுக்கு பதில் மகள்களை வைத்து உழுத விவசாயி: டிராக்டர் வாங்கிக் கொடுத்த பிரபல நடிகர்

ஆந்திராவில் மாடு வாங்க பணம் இல்லாமல் மகள்களை வைத்து நிலத்தை உழுத விவசாயி குறித்து அறிந்த சோனு அன்றே அவர்களுக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தார். மேலும் வேலையை இழந்து காய்கறி விற்பனை செய்து வந்த ஐடி பெண்ணுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். மும்பையில் இருக்கும் தன் ஹோட்டலில் டாக்டர்கள் தங்க வசதி செய்து கொடுத்தார். மேலும் கடந்த ஜூலை மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தை நிசர்கா புயல் தாக்கவிருந்த நேரத்தில் மும்பையில் இருக்கும் பலருக்கும் தங்க ஏற்பாடு செய்தார்.

சோனு சூத் செய்து வரும் உதவிகளை பார்த்தவர்கள் நீங்கள் தான் இந்தியாவின் சூப்பர் மேன், நிஜ ஹீரோ என்றெல்லாம் பாராட்டி வருகிறார்கள். இப்படி சுயநலம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்து வரும் சோனுவுக்கு ஐ.நா. விருது கிடைத்துள்ளது.

சோனுவுக்கு மனித நேயத்திற்கான ஐ.நா. விருது கிடைத்துள்ளது. சோனுவுக்கு விருது கிடைத்துள்ளது குறித்து அறிந்த ரசிகர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விருது விவகாரம் குறித்து அறிந்தவர்கள் கூறியிருப்பதாவது,

சோனு சூதுக்கு இந்த விருது பொருத்தமானது. வாழ்த்துக்கள் சார். உங்களின் இந்த பணி தொடரட்டும். எதையும் எதிர்பார்க்காமல் ஓடி, ஓடி உதவி செய்தவருக்கு இந்த விருது பெரிய விஷயம் அல்ல. அவர் இதை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. சோனு சூத் ஒரு ஹீரோ. அவர் கடவுளின் பணி செய்து வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்