ஆப்நகரம்

ஸ்மார்ட்போன் விளம்பரத்தில் நடிக்க சூப்பர் ஸ்டாருக்கு இத்தனை கோடி சம்பளமா?

பாலிவுட் நடிகர் சல்மான் கான் விளம்பர படம் ஒன்றில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ. 7 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Mar 2020, 4:03 pm
பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார் சல்மான் கான். இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பாரத் படம் ஹிட்டானது. அதன் பிறகு சல்மான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 13 நிகழ்ச்சிக்காக அவர் வாங்கிய சம்பளத்தை கேட்டால் உங்களுக்கு பத்து நாட்களுக்கு தூக்கம் வராது.
Samayam Tamil salman khan


இந்நிலையில் அவர் பிரபல ஸ்மார்ட்போன் விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரப் படத்தில் நடிக்க சல்மானுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 7 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மெஹபூப் ஸ்டுடியோவில் கடந்த மாதம் அந்த விளம்பர பட ஷூட் நடந்துள்ளது. ஒரு விளம்பரப் படத்தை வழக்கமாக 3 அல்லது 5 நாட்களில் ஷூட் செய்வார்கள்.

தம்பியுடன் இப்படித் தான் பிகினியில் இருப்பதா?: நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்

விளம்பர படத்திற்காக ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள அதிக சம்பளம் இது தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த குறிப்பிட்ட பிராண்டின் அடுத்த விளம்பர நிகழ்ச்சிக்காக சல்மான் 4 முதல் 5 நாட்களை ஒதுக்கி வைத்துள்ளாராம்.

சல்மான் கான் தற்போது ராதே படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தை பிரபுதேவா இயக்குகிறார்.ஹீரோவாக நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார் சல்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்