ஆப்நகரம்

படுக்கைக்கு அழைக்கிறார்கள்: பெண்கள் குறித்து படு ஆபாசமாக பேசிய ரீல் சூப்பர் ஹீரோ.!

பெண்கள் குறித்தான நடிகர் முகேஷ் கண்ணாவின் ஆபாச பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Samayam Tamil 11 Aug 2022, 7:31 am
90ஸ் கிட்ஸ் பலரது வாழ்வில் இருந்தும் பிரிக்க முடியாத ஒரு பெயர் சக்திமான். பிரபல மாயாஜால டிவி தொடரான சக்திமான், அந்தக் காலத்து சூப்பர் மேன் கதைகளில் மிக பிரபலம். இந்த தொடரில் சக்திமானாக நடித்தவர் முகேஷ் கன்னா. சமீபகாலமாக சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வரும் இவரின் சமீபத்திய பேச்சினாலும் மிகப்பெரிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
Samayam Tamil முகேஷ் கண்ணா
முகேஷ் கண்ணா


மகாபாரதம் தொடரில் பீஷ்மராக நடித்த முகேஷ் கன்னா சக்திமான் தொடர் மூலம் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் சூப்பர் ஹீரோவாக மாறினார். இப்போதும் சக்திமானுக்கு ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இந்த தொடரின் நாயகன் முகேஷ் அவ்வப்போது சர்ச்சை கருத்துகளை கூறி சிக்கலில் மாட்டுவது வழக்கம்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் தனது யூடிப் சேனலில் பேசிய முகேஷ், இளைஞர்களை சமூக வலைதளங்களில் பெண்கள் வசியப்படுத்தி வருகின்றனர் என்றும், ஆண்களை படுக்கைக்கு அழைத்தால் அவர்கள் பெண்களே இல்லை, செக்ஸ் ஒர்க்கர்கள் என்றும் வாய்க்கு வந்தபடி பேசி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் முகேஷ் கன்னா.

மேலும், இந்த வயதில் எனக்கே இளம் பெண்கள் இலவச செக்ஸ் ஆசை காட்டி வலை விரிக்கின்றனர். சோஷியல் மீடியாவை இளைஞர்கள் தவறான வழியில் பயன்படுத்தி வருகின்றனர். இளம் பெண்கள் பசங்களை ஏமாற்றி காசு பறித்து வருகின்றனர் எனவும் அவர் பேசி உள்ளார்.

Janhvi Kapoor: அந்த ஹீரோக்கள் மட்டும் வேண்டவே வேண்டாம்: என்ன ஜான்வி இப்படி சொல்லிட்டாங்க.!

அவரின் இந்த பேச்சு பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தினமும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து முகேஷ் வாய் திறந்தாரா என்றும் பெண்கள் தங்களின் ஆசையை வெளியில் சொல்லாமல், ஆண்களின் ஆசைக்கு தகுந்தபடி மட்டும் தான் நடக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சக்திமான் தொடரை படமாக்கும் முயற்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்