ஆப்நகரம்

ஆர்வக்கோளாறில் அவசரப்பட்ட இயக்குநர்: பப்ளிக்கா அசிங்கப்படுத்திய ரஜினி ஹீரோயின்

லாக்டவுனின்போது சோனாக்ஷி சின்ஹா மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்று ட்வீட்டினார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி. இதை பார்த்த சோனாக்ஷி அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Samayam Tamil 14 Apr 2020, 3:11 pm
ஊரடங்கு உத்தரவால் அனைத்து ஷூட்டிங்கும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் நான் மட்டும் எப்படி வேலை பார்ப்பேன் என பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியை ட்விட்டரில் விளாசியுள்ளார்.
Samayam Tamil shooting issue sonakshi sinha gives it back to vivek agnihotri
ஆர்வக்கோளாறில் அவசரப்பட்ட இயக்குநர்: பப்ளிக்கா அசிங்கப்படுத்திய ரஜினி ஹீரோயின்


ஷூட்டிங்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்து எந்த பட ஷூட்டிங்கும் நடக்கவில்லை. படங்கள் மட்டும் அல்லாமல் டிவி சீரியல்களின் ஷூட்டிங்கும் நடக்கவில்லை. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா போன் பேசிக் கொண்டே சென்ற புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இது போன்ற நேரத்தில் யார் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று கேள்வி எழுப்பினார்.

Twitter-Vivek Ranjan Agnihotri

சோனாக்ஷி சின்ஹா

விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியின் ட்வீட்டை பார்த்த சோனாக்ஷி சின்ஹா கடுப்பாகி, இது போன்ற நேரத்தில் வதந்திகளையும், பொய் செய்தியையும் பரப்புவர்களை தடுக்க என்ன செய்வது என்று மும்பை போலீசாரிடம் ட்விட்டரில் கேட்டார். தான் பொறுப்பான குடிமகளாக எங்கும் செல்லாமல் வீட்டில் இருப்பதாக சோனாக்ஷி விளக்கம் அளித்தார்.

Twitter-Sonakshi Sinha

பழைய புகைப்படம்

ஒரு இயக்குநராக இருந்தும், பல யூனியன்களில் உறுப்பினராக இருக்கும் நீங்கள் நாட்டில் நடப்பது குறித்து அறிந்திருக்க வேண்டும். ஸ்டுடியோக்கள் மூடப்பட்டுள்ளதால், தேசிய ஊரடங்கு என்பதால் படப்பிடிப்புகள் எதுவும் நடக்கவில்லை. இது பழைய புகைப்படம். 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி எடுக்கப்பட்டது என்று சோனாக்ஷி விவேக்கை விளாசி மேலும் ட்வீட் போட்டார்.

Twitter-Sonakshi Sinha

சண்டை

சோனாக்ஷி ட்வீட் போட பதிலுக்கு விவேக் ஏதாவது சொல்ல என்று சமூக வலைதளவாசிகளுக்கு ஒரே என்டர்டெயின்மென்டாக இருந்தது. இதையடுத்து இன்று நிறைய என்டர்டெய்ன்மென்ட் ஆகிவிட்டது, போதும். அனைவருக்கும் பைசாகி வாழ்த்துக்கள். வீடுகளில் பத்திரமாக இருங்கள் என்று கூறிவிட்டு நடையை கட்டினார் சோனாக்ஷி சின்ஹா. இதற்கிடையே சோனாக்ஷி சின்ஹாவின் ரசிகர்களும் விவேக்கை விளாசி ட்வீட் போட்டார்கள். பதிலுக்கு விவேக் ஆதரவாளர்கள் சோனாக்ஷியை கிண்டல் செய்தார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்