ஆப்நகரம்

மகள் ஜான்விக்கு ஸ்ரீதேவி சொன்ன 2 முக்கியமான விஷயம்: அது என்ன தெரியுமா?

யாரையும் சார்ந்திருக்காதே, உனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கு என்று தன் அம்மா ஸ்ரீதேவி தனக்கு அறிவுறை வழங்கியதாக நடிகை ஜான்வி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Jun 2021, 6:31 pm

ஹைலைட்ஸ்:

  • அம்மா ஸ்ரீதேவிவை நினைத்து வாடும் ஜான்வி கபூர்
  • பாலிவுட்டில் பிசியாக இருக்கும் ஜான்வி கபூர்
  • தங்கையை பார்த்து பெருமைப்படும் ஜான்வி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil janhvi kapoor
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கிறார் ஜான்வி.
அம்மா செல்லமான ஜான்வி தன் கெரியர், குடும்பம் பற்றி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

நடிகைகள் ஆலியா பட், சாரா அலி கான் ஆகியோர் யாருக்காகவும் மாறாமல், அவர்களாகவே இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. பிரபல ஹாலிவுட் பாடகி பியான்சே, என் தங்கை குஷி கபூர் ஆகியோர் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர்கள் இருவரும் எதற்காகவும் யாரையும் சார்ந்திராதவர்கள்.

யாரையும் சார்ந்திருக்காதே, உனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கு என்று அம்மா எனக்கு அறிவுரை வழங்கினார். தடக் படத்தின் ரிலீஸின்போது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அம்மா இறந்ததால் என் யோசனை எல்லாம் அவரை பற்றியே இருந்தது என்றார்.

தன் நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய்க்கு சென்ற இடத்தில் குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார் ஸ்ரீதேவி. ஜான்வி தடக் படப்பிடிப்பில் இருந்ததால் துபாய்க்கு செல்லவில்லை.

ஸ்ரீதேவி இறந்ததை பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் தான் ஜான்வியிடம் கூறி அவரை சித்தப்பா அனில் கபூர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். தன் முதல் படமான தடக்கை பார்க்க அம்மா இல்லையே என்று வருத்தப்பட்டார் ஜான்வி.

ஜான்வி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரூஹி. அதையடுத்து அவர் குட்லக் ஜெர்ரி படத்தில் நடித்து வந்தார். மேலும் கரண் ஜோஹரின் தோஸ்தானா 2 படத்திலும் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தில் நடிக்கவிருந்த கார்த்திக் ஆர்யனை நீக்கிவிட்டார்கள்.

கார்த்திக் ஆர்யனும், ஜான்வியும் காதலித்தார்கள். ஆனால் அவர்களின் காதல் துவங்கிய வேகத்தில் முறிந்துவிட்டது. அதன் பிறகே தோஸ்தானா 2 படத்தில் இருந்து கார்த்திக் ஆர்யன் நீக்கப்பட்டார்.
ஸ்ரீதேவி மகளுக்கு நடிப்பு தவிர்த்து இப்படி ஒரு திறமையா!: வியக்கும் ரசிகர்கள்இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புகள் இல்லாததால் வீட்டில் இருக்கும் ஜான்வி ஓவியம் வரைந்து கொண்டிருக்கிறார். தான் வரைந்த சில ஓவியங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு, தன்னை ஓவியர் என்று அழைக்கலாமா என்று கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்