ஆப்நகரம்

வருங்கால கணவர் இப்படித் தான் இருக்கணும்: 5 கன்டிஷன் போடும் ஸ்ரீதேவி மகள்

தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.

Samayam Tamil 10 Sep 2019, 5:09 pm
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் படம் மூலம் நடிகையானார். அவர் தற்போது பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
Samayam Tamil what does janhvi kapoor expect from future hubby
வருங்கால கணவர் இப்படித் தான் இருக்கணும்: 5 கன்டிஷன் போடும் ஸ்ரீதேவி மகள்


இந்நிலையில் அவர் தனது திருமணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். எதிர்காலம் குறித்து ஜான்வி கூறியிருப்பதாவது,

நான் சீக்கிரம் பாசம் வைத்துவிடுவேன் என்பதால் என் அம்மாவுக்கு என் கணிப்பின் மீது நம்பிக்கை இல்லை. எனக்கு கணவராக வருபவர் திறமையானவராக இருக்க வேண்டும், செய்யும் வேலையை விரும்பி செய்ய வேண்டும். அவரிடம் இருந்து நான் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக அவருக்கு நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும். அவர் என் மீது பைத்தியமாக இருக்க வேண்டும் என்பது தான் மிக, மிக முக்கியமான விஷயம்.

என் திருமணம் பிரமாண்டமாக நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. என் திருமணம் பாரம்பரிய முறைப்படி அதுவும் திருப்பதியில் தான் நடக்கும். திருமணத்தன்று நான் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிவேன். விருந்தாளிகளுக்கு தென்னிந்திய உணவு வகைகள் பரிமாறப்படும். எனக்கு இட்லி, சாம்பார், தயிர்சாதம் ரொம்ப பிடிக்கும் என்றார்.

ஜான்வி தற்போது தனக்கு மிகவும் பிடித்த நடிகரான ராஜ்குமார் ராவுடன் சேர்ந்து ரூஹிஹப்சா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தோஸ்தானா 2 படத்தில் கார்த்திக் ஆர்யன் தங்கையாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஜான்வி.

ஜான்வி தனது முதல் பட ஹீரோவான இஷான் கட்டாரை காதலிப்பதாக பேசப்படுகிறது. இஷான் அடிக்கடி ஜான்வியை சந்திக்க அவரின் வீட்டிற்கு செல்வதாக கூறப்படுகிறது. இஷான், ஜான்வி காதலுக்கு அப்பா போனி கபூர் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகவும் பேசப்படுகிறது. ஆனால் இஷானும், ஜான்வியும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்றும் சிலர் கூறுகிறார்கள்.

ஜான்வியின் படங்களை விட அவரின் காதல் வாழ்க்கை குறித்து தான் அதிகம் செய்திகள் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்