ஆப்நகரம்

உங்களுக்காக காத்திருக்கணுமானு திட்டிய இயக்குநர்: மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்

ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்தபோது ஷாருக்கான் படக்குழுவை சேர்ந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டதாக ஸ்ரேயாஸ் தல்பதே தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 9 Nov 2020, 6:41 pm
ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த ஓம் சாந்தி ஓம் படம் கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படம் மூலம் தான் தீபிகா பாலிவுட்டில் அறிமுகமானார்.
Samayam Tamil shahrukh khan


ஓம் சாந்தி ஓம் படம் ரிலீஸாகி 13 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அந்த படத்தில் ஷாருக்கானின் நெருங்கிய நண்பராக நடித்த ஸ்ரேயாஸ் தல்பதே கூறியிருப்பதாவது,

ஓம் சாந்தி ஓம் என் மனதுக்கு நெருக்கமான படம். நான் ஃபரா கான், ஷாருக்கானுடன் சேர்ந்து வேலை செய்த முதல் படம். ஜனவரி 26ம் தேதி படப்பிடிப்பை துவங்கினோம். மறுநாள் என் பிறந்தநாள். அது குறித்து படக்குழுவுக்கு தெரிய வரவே, மேக்கப் அறை முழுக்க பலூன்களால் அலங்கரித்தனர். மேலும் பெரிய வாழ்த்து அட்டையில் படக்குழுவில் இருந்த அனைவரும் கையெழுத்திட்டிருந்தார்கள். படக்குழுவுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியதை மறக்கவே முடியாது.
முதல் நாள் படப்பிடிப்பின்போது அனைவரையும் காலை 7-7.30 மணிக்குள் வரச் சொல்லியிருந்தார் ஃபரா கான். 9 மணிக்கு படப்பிடிப்பை துவங்க வேண்டியது. நான் விக் அணிய வேண்டி இருந்ததால் சீக்கிரமே வரச் சொன்னார்கள். நாங்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டோம். ஆனால் ஷாருக்கான் மட்டும் வரவில்லை. அதனால் அவருக்காக காத்திருந்தோம். அவர் காலை 10 மணிக்கு வந்தார். அவரை பார்த்ததும் ஃபரா கான் கோபம் அடைந்தார்.

உங்களுக்காக அனைவரும் காத்திருக்கணுமா என்று கேட்டு ஷாருக்கானை திட்டினார். அதன் பிறகு ஷாருக்கான் என் மேக்கப் அறைக்கு வந்து சாரி சொன்னார். சாரி சொல்லிவிட்டு, நாளையில் இருந்து நீங்கள் எல்லாம் 10 மணிக்கு வாங்க என்றார். மறுநாள் முதல் 8 மணிக்கு பதில் 9 மணிக்கு படப்பிடிப்புக்கு சென்றேன். 10 மணிக்குள் தயாராகி படப்பிடிப்பை துவங்குவோம்.

ஷாருக்கானுடனான என் முதல் காட்சியில் நான் நடித்த விதம் ஃபராவுக்கு பிடிக்கவில்லை. அதன் பிறகு அவர் நடித்துக் காட்டியதுபடி நடித்தேன். இது முதல் நாள் நடந்தது. அதன் பிறகு ஃபரா என்னை திட்டவே இல்லை என்றார்.

பிரபல தயாரிப்பாளரின் வீட்டில் ரெய்டில் சிக்கிய கஞ்சா: மனைவி கைது

அடுத்த செய்தி

டிரெண்டிங்