ஆப்நகரம்

உங்க பேச்சை நீங்களே கேட்காமல் இப்படி தற்கொலை பண்ணலாமா சுஷாந்த் சிங் ராஜ்புட்?

சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிந்த ரசிகர்கள் உங்கள் பேச்சை நீங்களே கேட்கவில்லையே என்று தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 14 Jun 2020, 8:17 pm
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டில் இன்று மதியம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த அவர் இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
Samayam Tamil sushant singh rajput


கொரோனா லாக்டவுனின்போது சுஷாந்த் சிங் ராஜ்புட் வீட்டில் தனியாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மன அழுத்தத்திற்கு உரிய சிகிச்சை பெறாமல் இப்படி அவசரப்பட்டுவிட்டாரே என்று அவருடன் வேலை செய்த திரையுலக பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்ய 'இது' தான் காரணமாம்

முன்னதாக சுஷாந்த் சிங் ராஜ்புட் ட்விட்டரில் கூறியதாவது,

ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. அதனால் அழுவதற்கு வெட்கப்பட வேண்டாம். உணர்ச்சிகளை உள்ளே அடக்கி வைக்காமல் வெளிப்படுத்துவதில் தவறு இல்லை. இது வீக்னஸ் இல்லை பலத்தின் அறிகுறி என்று தெரிவித்திருந்தார்.
அவரின் ட்வீட்டை நினைவுகூர்ந்துள்ள ரசிகர்கள், அடுத்தவர்களுக்கு அழகாக அறிவுரை வழங்கினீர்களே சுஷாந்த். உங்கள் பேச்சை நீங்களே கேட்டு மன அழுத்தத்தை உள்ளேயே வைத்து வேதனைப்படாமல் உரிய சிகிச்சை எடுத்திருந்திருக்கலாமே. உங்களுக்கு நெருக்கமான யாரிடமாவது உங்களின் மன நிலையை கூறி அழுதிருக்கலாமே. தனியாய் தவித்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு பதில் யாரிடமாவது பேசி மன பாரத்தை இறக்கி வைத்திருந்திருக்கலாமே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் குறித்து பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கூறியிருப்பதாவது, சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் தனிமையாக உணர்ந்தாலோ அல்லது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலோ தயவு செய்து யாரிடமாவது பேசுங்கள். அது உங்கள் வலியை குறைக்கச் செய்யும். நம்புங்கள், உங்களை நிச்சயம் பிடித்தவர்கள் இருக்கிறார்கள். அதனால் இது போன்ற விபரீத முடிவை எடுக்கும் முன்பு அவர்களை பற்றி ஒரு முறை யோசித்துப் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

லூசராக இருந்தாலும் தற்கொலை செய்யக் கூடாது என்று சிச்சோரே படத்தில் தெரிவித்தார் சுஷாந்த் சிங் ராஜ்புட். ஆனால் பாலிவுட்டில் வெற்றிகரமானவராக இருந்தும் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கிறார்கள் ரசிகர்கள்.

கார் ஜன்னல் வழியாக தலையை வெளியே நீட்டி சிரித்தபடி நடித்த இர்ஃபான் கான் தற்போது உயிருடன் இல்லை. அதே போன்ற காட்சியில் நடித்த சுஷாந்த் சிங்கும் இன்று உயிருடன் இல்லை என்று சமூக வலைதளவாசிகள் தெரிவித்துள்ளனர்.
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிக்கவில்லை முன்னாள் கூல் கேப்டனாகவே வாழ்ந்திருக்கிறார். அதற்கு சிறந்த உதாரணம் இது தான் என்று கூறி வீடியோ ஒன்றை ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.
சுஷாந்த் சிங் ராஜ்புட் இறந்தது குறித்து திரையுலக பிரபலங்கள் மட்டும் அல்ல பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள் என்று பலரும் அதிர்ச்சி அடைந்து ட்வீட் செய்துள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் சிங் இறந்த செய்தி அறிந்து அவரின் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்