ஆப்நகரம்

பிக் பாஸுக்காக கமலுக்கு ஜுஜுபி ரூ. 60 கோடி, சல்மான் கானுக்கு ரூ. 350 கோடிப்பு

பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 15வது சீசனை தொகுத்து வழங்க நடிகர் சல்மான் கானுக்கு ரூ. 350 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

Samayam Tamil 19 Sep 2021, 2:26 pm
பிக் பாஸ் 15 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு ரூ. 350 கோடி சம்பளம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
Samayam Tamil wow salman khan to get rs 350 crore to host bigg boss 15
பிக் பாஸுக்காக கமலுக்கு ஜுஜுபி ரூ. 60 கோடி, சல்மான் கானுக்கு ரூ. 350 கோடிப்பு



பிக் பாஸ் 15

பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 15வது சீசன் அக்டோபர் மாதம் 2ம் தேதி துவங்கவிருக்கிறது. இந்த சீசனையும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கவிருக்கிறார். கடந்த 11 சீசன்களாக சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. ஒவ்வொரு சீசனுக்கும் தன் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார் சல்மான்.

சல்மான் கான்

பிக் பாஸ் 15 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கானுக்கு ரூ. 350 கோடி சம்பளம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. 14 வாரங்களுக்கு ரூ. 350 கோடியா என்று அனைவரும் வியக்கிறார்கள். வாரத்திற்கு ரூ. 25 கோடி சம்பளம். வார இறுதி நாட்களில் வருவதற்கு இத்தனை கோடி சம்பளமா, அடேங்கப்பா என்று ரசிகர்கள் வியந்து போயிருக்கிறார்கள்.

சம்பளம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் முதல் 6வது சீசன் வரை ஒரு எபிசோடுக்கு ரூ. 2.5 கோடி வாங்கியிருக்கிறார் சல்மான் கான். 7வது சீசனில் தன் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி ரூ. 5 கோடி வாங்கினார். பிக் பாஸ் 13 நிகழ்ச்சிக்கு வாரத்திற்கு ரூ. 13 கோடி வாங்கினார். தற்போது 15வது சீசனில் வாரத்திற்கு ரூ. 25 கோடி வாங்கப் போகிறார்.

கமல் ஹாசன்

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 5வது சீசனை தொகுத்து வழங்க உலக நாயகன் கமல் ஹாசனுக்கு ரூ. 60 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கே ரூ. 60 கோடியா என்று பலரும் வியந்தார்கள். இந்நிலையில் சல்மான் கானின் சம்பள விபரம் வெளியானதும் ரூ. 60 கோடி எல்லாம் ஜுஜுபி என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்