ஆப்நகரம்

மெகா படத்தில் இருந்து பிரபல ஹீரோ விலகலையாம், தூக்கிட்டாங்களாம்

பிரபல நடிகர் ஒருவர் பாலிவுட் படத்தில் இருந்து விலகவில்லையாம், அவரை நீக்கிவிட்டார்களாம்.

Samayam Tamil 18 Dec 2020, 1:27 pm
தமிழ் திரையுலகின் பிசியாக நடிகர் அவர். கோலிவுட்டிலேயே நடிக்க நேரம் இல்லாதபோது அவர் பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிப்புக்கு பெயர் போன பாலிவுட் நடிகரின் படத்தில் அவருக்கு நெருங்கிய நண்பராக நடிக்க ஒப்பந்தமானார்.
Samayam Tamil gossip


அந்த கதாபாத்திரத்திற்காக நம்ம நடிகரை உடல் எடையை வெகுவாக குறைக்குமாறு கூறியிருக்கிறார்கள். ராணுவ வீரர் கதாபாத்திரத்திற்கு இந்த அளவுக்கு வெயிட் இருக்கக் கூடாது என்றார்களாம். நடிகரும் சரி என்று கூறி வெயிட்டை குறைக்க முயன்று வந்தார்.

இந்நிலையில் லாக்டவுன் அமலுக்கு வரவே நடிகருக்கு மீண்டும் எடை கூடிவிட்டது. லாக்டவுன் முடிந்து மீண்டும் படப்பிடிப்பை துவங்கிவிட்டார்கள். ஆனால் நடிகர் வெயிட்டை குறைக்காததை பார்த்த பாலிவுட் ஹீரோ டென்ஷன் ஆகிவிட்டாாம். படத்திற்கு ஏற்றது போன்று உடல் எடையை ஏற்றுவதும், குறைப்பதுமாக இருப்பவர் அந்த இந்தி நடிகர். அதனால் எடையை குறைப்பது பிரச்சனை இல்லை என்று நினைக்கிறாராம்.

நம்ம நடிகர் பல்காக இருந்ததை பார்த்து கடுப்பான இந்தி ஹீரோ அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம். நம்ம நடிகருக்கு பதில் இந்தி நடிகர் ஒருவரை ஒப்பந்தம் செய்துவிட்டனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்