ஆப்நகரம்

ஒருத்தனும் கண்டுக்க மாட்டேங்குறானே: திட்டம் போட்டு நாடகமாடிய நடிகை?

நடிகையும், அவரின் காதலரும் சேர்ந்து போட்ட டிராமா நல்லாவே ஒர்க்அவுட் ஆகிவிட்டது.

Samayam Tamil 8 Jan 2020, 5:05 pm
நடிகையும், அவரின் காதலரும் சேர்ந்து போட்ட டிராமா நல்லாவே ஒர்க்அவுட் ஆகிவிட்டது.
Samayam Tamil actress and boy friends publicity stunt
ஒருத்தனும் கண்டுக்க மாட்டேங்குறானே: திட்டம் போட்டு நாடகமாடிய நடிகை?


நடிப்பு

பிரபல நடிகை ஒருவர் தமிழ் சினிமா இயக்குநரை காதலித்து வருகிறார். திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி வாழ்கிறார்கள். எங்கு சென்றாலும் ஜோடியாகத் தான் செல்கிறார்கள். இந்நிலையில் நடிகை விருது விழாவுக்கு காதலர் இல்லாமல் தனியாக சென்றார். முன்னதாக இயக்குநர் புத்தாண்டு அன்று சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவாலும் நடிகைக்கும், அவருக்கும் இடையே புகைய ஆரம்பித்துவிட்டது என்று பேச்சு கிளம்பியது.

காதல் முறிவு

நடிகை விருது வாங்கியும் காதலர் அவரை சமூக வலைதளத்தில் வாழ்த்தவில்லை. வழக்கமாக காதலர் அந்த நடிகையை செல்லமே, தங்கமே என்று சமூக வலைதளங்களில் கொஞ்சுவார். ஆனால் இரண்டு விருது வாங்கியும் இம்முறை இயக்குநர் அமைதியாக இருக்கவே அவர்கள் பிரிந்துவிட்டனர் என்று பலரும் முடிவே செய்துவிட்டார்கள்.

நடிப்பாம்

நடிகையின் வாழ்வில் வந்து சென்ற காதல்களில் இதுவும் ஒன்று என்று பேசத் துவங்கினார்கள். ஆனால் எல்லாமே நடிப்பாம் கோப்ப்பால். நடிகை பெரிய நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ள படத்தை பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த படத்தின் ஹீரோவின் புகழை பலரும் பாட அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பவே நடிகை தன் காதலருடன் சேர்ந்து இப்படி ஒரு டிராமா போட்டதாக கோலிவுட்டில் கூறுகிறார்கள்.

விளம்பர பிரியை

ஏதாவது சர்ச்சையை கிளப்பி விளம்பரம் தேடுவது தான் நடிகையின் ஸ்டைல். இம்முறை அந்த பெரிய ஹீரோவையே ஓரங்கட்டும் அளவுக்கு டிராமா போட்டு அனைவரும் தன்னை பற்றியே பேசும்படி செய்துவிட்டார். இதெல்லாம் நடிகையின் வேலை தான் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். எது எப்படியோ, நடிகை நினைத்தது நடந்துவிட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்