ஆப்நகரம்

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்: நடிகை அடம்

லீடர் நடிகரின் படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று வாரிசு நடிகை ஒருவர் ஒத்தக்காலில் நிற்கிறாராம்.

Samayam Tamil 27 May 2021, 6:26 pm
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் லீடர் நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்த வாரிசு நடிகை ஒருவர் தன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார்.
Samayam Tamil gossip


திருமணம், குழந்தைகள் என்றான பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்த அவர் தற்போது கோலிவுட்டில் பிசியாகிவிட்டார். அவரை தேடி பட வாய்ப்புகள் வந்தாலும் அதன் ஹீரோக்கள் யாரும் முன்னணி நடிகர்கள் இல்லை.

எனவே, அது போன்றவர்களின் படத்தில் நடித்தால் விரைவில் பெரிய இடத்தை அடைய முடியாது என்று நடிகை நினைக்கிறாராம். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் தான் நடித்த படம் ஒன்றின் ஹீரோவான லீடரை அணுகினாராம் நடிகை.

நம்ம என்ன அப்படியா பழகியிருக்கோம், உங்கள் படத்தில் நடிக்க விரும்புகிறேன், வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டாராம் நடிகை. சரி என்று சொன்ன லீடர் நடிகரோ அதன் பிறகு நடிகையை கண்டுகொள்ளவே இல்லையாம்.

லீடர் தன்னை அழைப்பார் என்று செல்போனை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருக்கிறாராம் நடிகை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்