ஆப்நகரம்

ஒரேயடியாக இறங்கி வந்த நடிகை: நக்கலாக சிரிக்கும் ஹீரோக்கள்

மார்க்கெட் அடி வாங்குவதால் கண்ணழகி நடிகை தன் கவனத்தை வேறு பக்கம் திருப்பியிருக்கிறாராம்.

Samayam Tamil 20 Aug 2020, 5:34 pm
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் அந்த கண்ணழகி நடிகை. செட்டில் அநியாயத்திற்கு சமத்துப் பிள்ளையாக நடந்து கொள்வார். அதனாலேயே சில பெரிய ஹீரோக்கள் நடிகையை பரிந்துரை செய்து வந்தனர்.
Samayam Tamil gossip


நடிகையும் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். தற்போது முன்னணி நடிகர்களின் கவனம் நடிகை மீது இல்லை. இதை புரிந்து கொண்ட நடிகை சீனியர் ஹீரோக்களுக்கு ஜோடியாக முடிவு செய்துவிட்டார்.

தொடர்ந்து சீனியர்களுடன் நடித்தால் இளம் ஹீரோக்களுக்கு அக்கா, அம்மாவாக்கிவிடுவார்களோ என்கிற பயம் நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வளர்ந்து வரும் மற்றும் முன்னணி நடிகர் என்கிற அந்தஸ்தை பெற போராடும் நடிகர்களுக்கு ஜோடியாக தயாராகிவிட்டார் நடிகை.

எந்த நடிகர்களை பார்த்தும் பார்க்காதது போன்று முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாரோ தற்போது அதே நடிகர்களிடம் தானாக சென்று சிரித்துப் பேசுகிறாராம்.

பட வாய்ப்புக்காக நடிகை இந்த அளவுக்கு இறங்கி வந்ததை பார்த்த சில ஹீரோக்கள் கிண்டலாக சிரிக்கிறார்களாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்