ஆப்நகரம்

புருஷன், புள்ள இருப்பதை மறைத்துவிட்டு சிங்கிள் வேஷம் போடும் நடிகை

கோலிவுட்டில் நடிகை ஒருவர் செய்துள்ள காரியம் குறித்து தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Samayam Tamil 24 Mar 2020, 5:44 pm
படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி வருபவர் அந்த நடிகை. பார்க்க பக்கத்து வீட்டுப் பெண் போன்று மிகவும் சிம்பிளாக இருப்பார். அதே சமயம் அழகும் கூட. அழகு மட்டும் அல்ல நடிப்பதிலும் கெட்டிக்காரி. அம்மணி தனது வயதை குறைத்துக் கூறி வருகிறார்.
Samayam Tamil gossip


நிஜத்தில் அவருக்கு வயது அதிகம். மேலும் திருமணமாகி ஒரு பையன் இருக்கிறான். கணவர், குழந்தையை வேறு ஊரில் விட்டுவிட்டு அம்மணி மட்டும் சென்னையில் இருந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். யாராவது திருமண பேச்சை எடுத்தால் ஓ மை காட் நான் இன்னும் சின்னப்புள்ள என்று சிரித்துக் கொண்டே கூறுகிறாராம்.

நடிகைக்கு ஏற்கனவே கல்யாணமான விஷயம் அறிந்தவர்களோ முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறாரே, நம்மை எல்லாம் முட்டாள் என்று நினைக்கிறாரா என்று கூறி நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள். நடிகை வம்பு தும்புக்கு எல்லாம் போகாதவர். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை விஷயத்தை மறைக்கும் ஒரே காரணத்திற்காக விமர்சிக்கப்படுகிறார்.

திருமணமாகிவிட்டது என்றாலே மார்க்கெட் இருக்காது, இந்நிலையில் குழந்தை வேறு இருப்பது தெரிந்தால் யார் சான்ஸ் கொடுப்பார்கள் என்று நினைத்து தான் நடிகை இப்படி செய்துவிட்டாராம்.

பொண்டாட்டி வந்ததும் ஆளே மாறிப் போன நடிகர்

அடுத்த செய்தி

டிரெண்டிங்