ஆப்நகரம்

பிரபல கட்சியில் இருந்து நடிகரின் கட்சிக்கு தாவப் போகும் நடிகை

உச்ச நடிகரின் கட்சியில் சேர பிரபல நடிகை ஒருவர் முடிவு செய்துள்ளாராம்.

Samayam Tamil 21 Dec 2020, 5:25 pm
கட்சி எல்லாம் இப்ப நமக்கெதுக்கு என்று கேட்டு வந்த உச்ச நடிகர் அரசியலில் குதிப்பது என்று முடிவு செய்துவிட்டார். புத்தாண்டில் கட்சி துவங்கி தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். அறிவிப்பு வெளியிட்ட கையோடு கட்சி துவங்கும் வேலையில் இறங்கிவிட்டார்.
Samayam Tamil gossip


இந்நிலையில் அவர் கட்சியில் சேர சில நடிகைகளுக்கு ஆசை ஏற்பட்டுள்ளதாம். அதிலும் குறிப்பாக கவர்ச்சிக்கு பெயர் போன முன்னாள் ஹீரோயின் ஒருவருக்கு உச்ச நடிகரின் கட்சியில் சேர விருப்பமாம். அந்த நடிகை ஏற்கனவே பிரபல கட்சியில் இருக்கிறார்.

அந்த கட்சியில் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நடிகை நினைக்கிறாராம். இதையடுத்தே உச்ச நடிகரின் கட்சிக்கு தாவ முடிவு செய்துள்ளார்.

நடிகைகள் ஆசைப்பட்டு ஒரு கட்சியில் சேர்வதும், அங்கு போதிய மரியாதையும், முக்கியத்துவமும் இல்லை என்று கூறி வேறு கட்சியில் சேர்வதும் புதிது அல்ல. அதனால் அந்த முன்னாள் ஹீரோயின் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளதில் தவறே இல்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்