ஆப்நகரம்

திறமையை விட்டுவிட்டு கவர்ச்சியை நம்பும் நடிகை

நடிகை ஒருவர் தனது நடிப்புத் திறனை நம்பாமல் கவர்ச்சியை நம்பிக் கொண்டிருக்கிறார்.

Samayam Tamil 10 Sep 2019, 5:56 pm
பார்க்க பக்கத்து வீட்டுப் பெண் போன்று இருப்பவர் அந்த நடிகை. முதல் படத்தில் சேலை உடுத்தி பயங்கர ஹோம்லியாக நடித்தார். அந்த படத்தை பார்த்தவர்கள் யாருய்யா இந்த பொண்ணு சிம்பிளாக, அழகாக இருக்கிறாரே என்றார்கள்.
Samayam Tamil actress trusts glamour more than talent
திறமையை விட்டுவிட்டு கவர்ச்சியை நம்பும் நடிகை


அடுத்த படத்தில் மாடர்னாக நடித்து அசத்தினார். அம்மணிக்கு நடிப்பு நன்றாக வருகிறது. அப்படி இருக்கும்போது அவர் தனது திறமையை நம்பாமல் கவர்ச்சி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார்.

சேலையில் இந்த அளவுக்கு கூட கவர்ச்சி காட்டலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் வித, விதமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஆனால் அதே சமயம் அவரை பலரும் விளாசவும் செய்கிறார்கள். சேலை என்பது உடலை மறைக்கத் தானே தவிர இப்படி கண்ட இடத்தை காட்டுவதற்காக இல்லை, தமிழ் கலாச்சாரத்தை காற்றில் பறக்கவிட வேண்டாம் என்று சமூக வலைதளவாசிகள் கோபமாக தெரிவித்துள்ளனர்.

கவனத்தை ஈர்த்தால் அது சிறிது நேரம் அல்லது நாட்கள் மட்டுமே நிலைக்கும், மரியாதையை பெற முயற்சி செய்யுங்கள். அது தான் உங்கள் கெரியருக்கு நல்லது என்று நலம்விரும்பிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். கவர்ச்சி புகைப்படங்களால் தனது மார்க்கெட் பிக்கப்பாகும் என்று நடிகை நினைத்தால் அவர் தப்புக் கணக்கு போடுகிறார். இதை அவர் எவ்வளவு சீக்கிரம் உணர்கிறாரோ அது அவருக்கு அவ்வளவு நல்லது ஆகும்.

நடிகையின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து இயக்குநர்கள் அவருக்கு ஹீரோயின் கதாபாத்திரம் நிச்சயம் கொடுக்க மாட்டார்கள், வேறு மாதிரியான கதாபாத்திரங்களை தான் கொடுப்பார்கள். நடிகைக்கு திரையுலகில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அவர் தற்போது செய்யும் காரியத்தை உடனே நிறுத்த வேண்டும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்