ஆப்நகரம்

அட்ஜஸ்ட் பண்ணது தப்பாப் போச்சே, ஏமாத்திட்டாங்களே: நடிகை புலம்பல்

பிரபல நடிகை ஒருவர் தனது கொள்கையை தளர்த்தி பெரிய ஹீரோ ஒருவரின் படத்தில் நடித்தது குறித்து தற்போது புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

Samayam Tamil 23 Feb 2021, 6:45 pm
பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் அந்த நடிகை. நன்றாக பாட்டும் பாடுவார். தைரியமாக பேசுவதற்கு பெயர் போனவர். அவர் சர்ச்சை நடிகை பற்றி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil gossip


தனக்கு இருக்கும் திறமைக்கு ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்தார். அது போன்ற படங்களை தேர்வு செய்து நடித்தும் வந்தார். பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க அழைத்தால் முடியாது என்றார்.

இந்நிலையில் தான் அவர் தன் கொள்கையை தளர்த்தி முன்னணி ஹீரோ ஒருவரின் படத்தில் நடித்தார். மேடம், உங்களுக்கு வெயிட்டான கதாபாத்திரம் என்று இயக்குநர் சொல்ல அம்மணியும் சம்மதித்துவிட்டார். படம் ரிலீஸான பிறகு தான் தன் கதாபாத்திரம் டம்மி என்பதே அவருக்கு தெரிந்திருக்கிறது.

ஹீரோயின் கதாபாத்திரத்துடன் ஒப்பிடும் போது அவரின் கதாபாத்திரம் பரவாயில்லை தான். இருந்தாலும் நடிகையால் கோபப்படாமல் இருக்க முடியவில்லை. நல்ல கதாபாத்திரம் என்று சொல்லி என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார்கள் என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்புகிறாராம்.

இனி யார் என்ன சொன்னாலும் சரி, முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கவே கூடாது என்று முடிவு செய்துவிட்டாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்