ஆப்நகரம்

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்: நடிகரை இம்சிக்கும் நடிகை

நடிகை ஒருவர் நடித்தால் உங்களுடன் தான் சேர்ந்து நடிப்பேன் என்று பிரபல நடிகரிடம் கறாராக கூறிவிட்டாராம்.

Samayam Tamil 30 Aug 2021, 6:35 pm
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் அந்த பெரிய இடத்து பிள்ளை. அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை ஒருவர் பின்னால் காணாமல் போனார்.
Samayam Tamil gossip


நடிகையை அனைவரும் கிட்டத்தட்ட மறந்து போன நிலையில் பெரிய முதலாளி வீட்டிற்கு வந்து, நான் வந்துட்டேனு சொல்லு, திரும்பி வந்துட்டேனு சொல்லு என்று ரீ என்ட்ரி கொடுத்தார்.

நடிக்காமல் இருந்த காலத்தில் குண்டான நடிகை தற்போது தன் உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லியாகிவிட்டார். ஒல்லியான கையோடு தன் முதல் பட ஹீரோவுக்கு போன் போட்டு நாம் சேர்ந்து நடிப்போம் என்றாராம்.

அதற்கு நடிகர் முதலில் கண்டுகொள்ளவில்லையாம். நடிகை அவரை சும்மா விடுவதாக இல்லை. அதன் பிறகு பிற நடிகர்களின் படங்களுக்கு நடிகையை பரிந்துரை செய்தாராம். ஆனால் நடிகையோ, நான் நடித்தால் உங்கள் படத்தில் தான் நடிப்பேன், எனக்கு வேறு யார் படமோ வேண்டாம் என்று அடம் பிடிக்கிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்