ஆப்நகரம்

மத்தவங்களுக்கு ஒர்க்அவுட் ஆகுது, எனக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது: நடிகை புலம்பல்

தன் மார்க்கெட் படுத்து தூங்குவதை பார்த்துப் பார்த்து நடிகை ஒருவர் வேதனைப்படுகிறாராம்.

Samayam Tamil 28 Mar 2021, 5:24 pm
அழகா, குண்டாக இருந்தவர் அந்த நடிகை. அவரின் கொழுக், மொழுக் உடலமைப்பு தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்நிலையில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தன் உடல் எடையை வெகுவாக குறைத்து எலும்பும் தோலுமாக ஆகிவிட்டார்.
Samayam Tamil gossip


அவர் எடையை குறைத்ததோடு மார்க்கெட் மரண அடி வாங்கிவிட்டது. ஒல்லியான பிறகு நடிகையை பார்க்க பரிதாபமாக, வயதானவர் போன்று இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் அவரை மீண்டும் பழையபடி கொழுக் மொழுக் என்று ஆகுமாறு கூறி வருகிறார்கள்.

நடிகை அவ்வப்போது தன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அப்படி புகைப்படங்களை வெளியிட்டால் பட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார். அது நியாயம் தான். ஆனால் நடிகையின் புகைப்படங்களை யாருமே கண்டுகொள்வது இல்லை.

அவருக்கு புதுப்பட வாய்ப்புகளும் வருவதாக இல்லை. இதனால் நடிகையின் கவனம் வேறு பக்கம் திரும்பியிருக்கிறது. மற்ற நடிகைகள் எல்லாம் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டால் பட வாய்ப்பு கிடைக்கிறது. எனக்கு மட்டும் ஏன் ஒன்னும் நடப்பது இல்லை என்று புலம்புகிறாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்