ஆப்நகரம்

டீச்சர் நடிகையை பாராட்டிய சமத்து: சந்தேகமாக பார்க்கும் ரசிகர்கள்

சமத்து நடிகை தன் கணவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் டீச்சர் நடிகையை பாராட்டியதை நம்பாமல் சந்தேகமாக பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

Samayam Tamil 8 Mar 2021, 3:24 pm
சமத்து நடிகையின் கணவரும், நம்ம டீச்சர் நடிகையும் சேர்ந்து ஒரு காதல் படத்தில் நடித்திருக்கிறார்கள். அந்த படத்தில் டீச்சர் ஆடிய பாடல் வீடியோ அண்மையில் வெளியானது. அப்பொழுது டீச்சர் நடிகையை பாராட்டி ட்வீட் போட்டார் சமத்து.
Samayam Tamil gossip


அதை பார்த்தவர்களோ, இதில் ஏதோ உள்குத்து இருக்கிறதே என்று சமத்து நடிகையை சந்தேகமாக பார்க்கிறார்கள். அவர்கள் அப்படி சந்தேகப்பட இந்த சம்பவம் தான் காரணமாக இருக்கும் போன்று.

தன் கணவரை விட டீச்சர் நடிகைக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதாக உணர்ந்து, அவர் வரும் காட்சிகளை குறைக்கச் சொன்னார் சமத்து என்று முன்பு செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்பட்டது. டீச்சர் நடிகை ஏற்கனவே இந்த இயக்குநரின் படத்தில் நடித்திருப்பதால் அவரின் திறமை அறிந்து வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறாராம்.

மேலும் தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் டீச்சரும் நடிக்க ஓகே சொல்ல மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் தான் சமத்து டீச்சரை பாராட்ட அதை சந்தேகப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்