ஆப்நகரம்

இளம் நடிகையின் ஆபாச வீடியோவை வைரலாக்கியது 'இவர்' தானா?

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையின் போலி ஆபாச வீடியோ வெளியாகி வைரலாக யார் காரணம் என்று கோலிவுட்டில் பேச்சு கிளம்பியுள்ளது.

Samayam Tamil 1 Apr 2020, 4:18 pm
தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகையின் போலி ஆபாச வீடியோ வெளியாகி வைரலாக யார் காரணம் என்று கோலிவுட்டில் பேச்சு கிளம்பியுள்ளது.
Samayam Tamil is she the reason behind young actress fake obscene video
இளம் நடிகையின் ஆபாச வீடியோவை வைரலாக்கியது 'இவர்' தானா?



நடிகை

அண்டை நாட்டை சேர்ந்த அந்த பெண் சென்னை வந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஏகத்திற்கும் பிரபலமானார். காதல் விவகாரத்தில் சிக்கியதை தவிர அவர் வேறு எந்த சர்ச்சையிலும் சிக்காமல் ஒரு ஓரமாக இருந்துவிட்டார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரைத் தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதில் 2 பட வேலைகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.

விளம்பர பிரியை

நடிகையின் கெரியர் துவங்கிய வேகத்தில் பிக்கப் ஆனதை அவருடன் அந்த டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விளம்பர பைத்தியம் பிடித்த பெண்ணால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லையாம். நான் கண்டமேனிக்கு விளம்பரம் தேடியும் என்னை யாரும் நடிக்க அழைக்கவில்லை, இவளை மட்டும் வா, வான்னு கூப்பிடுறாங்களே என்று நடிகை மீது கடுப்பாகி அவரின் இமேஜை டேமேஜ் செய்ய முடிவு செய்தாராம்.

போலி வீடியோ

அண்டை நாட்டு நடிகை மீதான கடுப்பால் தான் அந்த விளம்பர பிரியை தனக்கு தெரிந்தவர்களை வைத்து மார்ஃபிங் வீடியோவை வெளியிட்டு அதை வைரலாக்கிவிட்டதாக கூறப்படுகிறது. நான் பெரிய ஆளாக்கும், என்னை ஆளாளுக்கு நடிக்க அழைக்கிறார்கள் என்று பில்ட்அப் கொடுத்த அந்த பெண் தான் அண்டை நாட்டு நடிகையின் போலி வீடியோ பரவ காரணம் என்று பேச்சு கிளம்பியுள்ளது.

கவலை

நான் நடிக்க வந்த உடனே இப்படி ஒரு வீடியோ வந்துவிட்டதே என்று அந்த நடிகை நொந்து போயுள்ளாராம். வீடியோ மேலும் பரவாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளாராம் நடிகை. அடுத்த நடிகைகளின் வாய்ப்பை தட்டிப்பறிப்பதை பார்த்திருக்கிறோம், இது என்ன இப்படி கேவலமான காரியம் என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்