ஆப்நகரம்

அசிங்கப்பட்டதை எப்படிலாம் சமாளிக்கிறார்: நடிகையை பார்த்து சிரிக்கும் கோலிவுட்

சீனியர் நடிகை ஒருவர் தன் மகளுக்கு நடிப்பில் ஆர்வமில்லை என்று கூறியிருக்கிறார். அதை பார்த்து கோலிவுட்காரர்கள் சிரிக்கிறார்கள்.

Samayam Tamil 5 Apr 2021, 6:56 pm
உச்ச நடிகர், முத்த நாயகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் அந்த சிவப்பழகி நடிகை. 80கள், 90களில் ஒரு பெரிய ரவுண்டு வந்த அவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
Samayam Tamil gossip


மகளை தன் வழியில் நடிகையாக்க விரும்பினார். மகளின் புகைப்படங்களை தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு அனுப்பி வைத்து வாய்ப்பு கேட்டார். புகைப்படங்களை பார்த்தவர்களோ, மேடம் உங்க பொண்ணு ஹீரோயின் மெட்டீரியல் கிடையாது என்று கூறிவிட்டார்கள்.

நடிகையும் எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டியில், தன் மகளுக்கு நடிகையாகும் விருப்பம் இல்லை என்றார்.

அந்த பேட்டியை பார்த்த கோலிவுட்காரர்களோ, மகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை எவ்வளவு அழகாக சமாளித்திருக்கிறார் பாருங்களேன் என்கிறார்கள்.

நடிகைக்கு மகளை நினைத்து தான் கவலையாக இருக்கிறதாம். தனக்கு பிறகு மகள் பத்திரமாக, நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் நடிகை.

இதற்கிடையே நடிகை எடுத்த புது முயற்சி ஒன்று தோல்வியில் முடிந்துவிட்டது. இருப்பினும் அதை பெரிதுபடுத்தாமல் நடிகை தைரியமாக இருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்