ஆப்நகரம்

தொந்தரவு செய்யும் நடிகை, தள்ளித் தள்ளிப் போகும் பெரிய இடத்து நடிகர்

தனக்கு பட வாய்ப்பு பெற்றுத் தருமாறு நடிகை ஒருவர் தன்னுடன் சேர்ந்து நடித்த பெரிய இடத்து நடிகரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

Samayam Tamil 5 Jul 2020, 3:44 pm
நல்ல அழகான நடிகை அவர். தமிழ் தவிர்த்து கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். கோலிவுட்டில் அறிமுகமான படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஆனால் அவருக்கு தமிழ் திரையுலகில் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
Samayam Tamil gossip


கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தினார். ஆனால் அவரால் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற முடியவில்லை. இருப்பினும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். அவர் நம்பிக்கை மட்டும் தான் அப்படியே இருக்கிறதே தவிர பட வாய்ப்பு எதுவும் அவரை தேடி வரவில்லை.

இந்நிலையில் நடிகை போட்டோஷூட் நடத்தி தன் புகைப்படங்களை வெளியிட்டு பார்த்தார். அதுவும் கை கொடுக்கவில்லை. இதையடுத்து கோலிவுட்டில் வெயிட்டான நடிகர் என்று பெயர் எடுத்துள்ள அந்த பெரிய இடத்து பிள்ளையை அணுகியிருக்கிறார் நடிகை.

நாம் இருவரும் சேர்ந்து நடித்ததை நான் இன்னும் மறக்கவில்லை, நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். எனக்கு உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று நடிகை அந்த நடிகரிடம் கேட்க அவர் கண்டுகொள்ளவில்லையாம்.

சரி உங்கள் படத்தில் இல்லாவிட்டாலும், பிற நடிகர்களின் படத்திலாவது வாய்ப்பு வாங்கிக் கொடுங்கள் என்று நடிகை தொந்தரவு செய்கிறாராம். நடிகரோ இது எதுக்கு தேவை இல்லாத பிரச்சனை என்று ஒதுங்கிவிட்டாராம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்