ஆப்நகரம்

நடிகையை பற்றி தீயாக பரவிய ரூ. 3 கோடி மேட்டர்

பிரபல நடிகை பற்றி ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவியுள்ளது.

Samayam Tamil 2 Aug 2020, 4:31 pm
நல்ல உயரமும், நடிக்கும் திறமையும் உள்ளவர் அந்த நடிகை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை எடுக்கும் இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்தவர். கொடுத்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார். அவர் கையில் தற்போது புதுப்படங்கள் எதுவும் இல்லை.
Samayam Tamil gossip


இந்நிலையில் அவர் பிரபல ஹீரோவுடன் சேர்ந்து நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. அந்த படத்தில் நடிக்க நடிகை ரூ. 3 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்பட்டது. மேலும் சம்பளத்தை குறைக்க மாட்டேன் என்று நடிகை அடம்பிடித்து வாக்குவாதம் செய்ததாகக் கூட பேச்சு கிளம்பயிது.

நடிகை சம்பளத்திற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்கிற தகவல் தீயாக பரவியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் நடிகை அந்த பிரபல ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. அப்படி இருக்கும்போது சம்பள விஷயத்தில் அவர் எப்படி பிரச்சனை செய்திருக்க முடியும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கிடையே நடிகையை தேடி வெப்தொடர் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் நடிகையோ வெப்தொடரில் நடிக்கும் ஐடியா இல்லை. அதற்கு வேறு ஆளை பாருங்கள் என்று கூறிவிட்டாராம்.

நடிகை புதுப் படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார். இந்த நேரத்தை பயன்படுத்தி அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர். மாப்பிள்ளை பார்க்கும் வேலை தீவிரமாக நடந்து வருகிறது. நல்ல மாப்பிள்ளை அமைந்தால் உடனே திருமணம் தான்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்